கடவுள் இருக்கும் இடம் எங்கே???
இவ்வுலகைப் படைத்தவன் இறைவனே இவ்வுலகில் உள்ள அனைத்து ஜீவன்களையும் படைத்தவன் இறைவனே.. அனைவரும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இவ்வுலகில் உள்ள வரை வாழ வழிவகுத்தவர் இறைவனே… பிறப்பு, இறப்பு, சந்தோஷம், துக்கம், ஆச்சரியம் ,அழகு, இயற்கை, நல்லவை , தீயவை இப்படி எண்ணற்ற அற்புதங்களை நாம் காண காரணமாக இருப்பவன் இறைவனே..
இறைவனை மனதார நினைத்தாலே போதும்
இப்படிப்பட்ட இறைவனை நாம் மனதார நினைத்தாலே போதும் நம் கண் முன் தோன்றுவார்.. பொதுவாக அனைவரும் கூறும் ஒரு கருத்து உண்டு நாம் பிறருக்கு தீமை செய்யாமல் நல்லதை மட்டுமே எண்ணி நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்துவர நமக்கு ஒரு துன்பம் வரும் போது இறைவன் நேரடியாக நம் கண் முன்னே தோன்றாவிட்டாலும் யாராவது ஒருவர் மூலமாக நமக்கு ஓடோடி வந்து உதவுவார் என்பர் அவை அத்தனையும் உண்மையே….
“ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்” என்பதை நீங்கள் இயலாத வறியவர்களுக்கு உங்களால் முடிந்த ஒரு சிறு உதவியை செய்யும் போது அவர் முகத்தில் தெரியும் ஆனந்த கண்ணீரில் அவர்களது உதட்டில் இருக்கும் ஆனந்த சிரிப்பில் நீங்கள் இறைவன் இருப்பதை உணர்வீர்கள்.. எனவே இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவரும் உங்களால் என்ன முடியுமோ அவற்றை இல்லாதவர்களுக்கு இறைவனின் அருளை முழுமையாகப் பெற்று மீண்டும் செல்வச் செழிப்போடும் மகிழ்ச்சியோடும் ஆரோக்கியத்தோடும் வாழுங்கள்…
இறைவன் எங்கெல்லாம் உள்ளார்
இறைவன் எங்கெல்லாம் இருக்கிறார் என்பது குறித்து ஒரு சில கருத்துக்களை முன்வைத்து தெளிவுபடுத்துகிறார் சாரதாதேவியார் .அவர் கூறிய கருத்துக்களை காண்போம்…
- கடவுளை சரணடைந்தால் விதியை வெல்லும் ஆற்றல் கிடைக்கும்
- கடவுள் எப்பொழுதும் நம் அருகிலேயே தான் இருக்கிறார்.
- கர்ம வினைகள் போக்கும் சக்தி பக்திக்கு மட்டுமே உண்டு.
- உங்கள் தேவைகளை நீங்களே பூர்த்தி செய்யுங்கள்.
- சரியான சந்தர்ப்பத்தில் எச்சரிக்கை அவனே உண்மையான நண்பன்.
- நாம் முன்னேறுவது ஓடு மற்றவரையும் முன்னேற்ற கல்வி அவசியம்
- கடவுளின் நாமத்தை உச்சரித்தால் உடலும் உள்ளமும் தூய்மை பெறும்
- முயற்சியும் உழைப்பும் இல்லாதவன் வாழ்வில் முன்னேற முடியாது
- கள்ளம் கபடம் உள்ளவர்கள் ஆன்மீக வளர்ச்சி அடைய முடியாது
- பண விஷயத்தில் பெரும்பாலான மனிதர்கள் நம்பிக்கையுடன் நடப்பதில்லை
- சோம்பலாக இருக்கும் போதுதான் தீய எண்ணங்கள் தோன்றுகின்றன
- கடவுள் ஒருவர் மட்டுமே உண்மை மற்றவரெல்லாம் பொய்
- மதம் பிடித்த யானை போன்றது மனது அதை எப்பொழுதும் கட்டுப்பாட்டுடன் வைத்து இருங்கள்
- தூய மனம் கொண்டவர்கள் உலகையும் தூய்மையாகவே காண்பர்