சமையல் குறிப்புவாழ்க்கை முறை

அசால்ட்டா ஆட்டு ரத்த பொரியல் செய்யணுமா.

ஆட்டு ரத்த பொரியல் அசால்ட்டா செய்யணுமா. இந்த பொரியல் சாப்பிடுவதற்கு மென்மையாகவும், ருசியாகவும் இருப்பதால் பெரியவர்களும், குழந்தைகளும் விரும்பி உண்ணுவார்கள். அசைவ உணவுகளில் ஆட்டு ரத்தப் பொரியல் செய்து சாப்பிடுவது கிராமங்களில் பிரசித்தம் ஆக உள்ளன.

ஆட்டு ரத்த பொரியல் ஓ! அப்பபா.. என்றாலும் சமைப்பதற்கும், சாப்பிடுவதற்கும் மிக எளிமையான அசைவ உணவு என்றால் அது ஆட்டு ரத்தத்தில் செய்யும் உணவு தான்.

ஆட்டு ரத்தப் பொரியல்

தேவையான பொருட்கள் : சுத்தம் செய்த ஆட்டு ரத்தம் ஒரு கப், சிறிய வெங்காயம் 10, வரமிளகாய் 3, சீரகம் 2 ஸ்பூன், கடுகு அரை ஸ்பூன், மிளகு அரை ஸ்பூன், உப்பு தேவையான அளவு. தேங்காய் துருவல் அரை கப், இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை ஒரு கொத்து, நல்லெண்ணெய் 50 மில்லி, கொத்தமல்லி சிறிது.

செய்முறை: ரத்தத்தில் தண்ணீர் ஊற்றி கழுவி தண்ணீர் முழுவதையும் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கையை போட்டு பிசைந்து கழுவ கூடாது. மேலும் ரத்தத்தில் அதிலுள்ள முடி வெளியேறும் அளவிற்கு மட்டும் அலசி எடுக்கவும்.

கடையிலேயே சுத்தம் செய்து தான் கொடுப்பார்கள். இருந்தாலும் 2, 3 முடி ஆங்காங்கே இருக்கும். அதை சுத்தமாக கழுவி எடுத்து விடவும். இதை சமைக்கும் போது உப்பு சேர்க்க வேண்டாம். தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம். போதுமென்றால் உப்பு சேர்க்க தேவை இல்லை. இந்த ரத்தத்திலேயே உப்பு சுவை இருக்கும்.

செய்முறை விளக்கம் : ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம் தாளித்து கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.

இத்துடன் வரமிளகாயை கிள்ளி போடவும். நன்கு வதங்கியவுடன் இஞ்சி, பூண்டு விழுது பேஸ்ட் சேர்த்து வதக்கி, ரத்தத்தை ஊற்றி நன்கு கிளறவும். மிதமான தீயில் வேக விடவும். இதில் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. கழுவி எடுத்த ரத்தத்தை மட்டும் ஊற்றி 5 முதல் 10 நிமிடம் வேக வைத்தால் நன்றாக வெந்து விடும்.

மிதமான தீயில் வேக விடவும். நன்றாக வெந்ததும் தேங்காய் துருவல் சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக இறக்கும் போது நல்லெண்ணை ஒரு ஸ்பூன் சேர்த்து மிளகுத்தூள் தூவி இறக்கவும். பிறகு கொத்தமல்லி தூவி கிளறி சூடாகப் பரிமாறவும்.

இதைச் செய்தவுடன் இந்த பொரியலை தனியாக சாப்பிட சுவையாக இருக்கும். மென்மையாக இருப்பதால் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி குழந்தைகள் சாப்பிடுவார்கள். ஜீரகம், மிளகு பொடி செய்து கடைசியாக தூவி விட்டால் இதன் சுவை இன்னும் தூக்கலாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *