போட்டித் தேர்வுக்கான பொது அறிவு குறிப்புகள்
போட்டித் தேர்வுக்கான பொது அறிவு பாடத்தில் அதிக மதிபெண்கள் பெறுவது அவசியமாகின்றது. போட்டித் தேர்வில் வெற்றி பெறுவது என்ற இலக்கைவிட டிஎன்பிஎஸ்சியில் முதலிடம் பிடிக்க இலக்கு கொண்டால் அதிக மதிபெண்களுடன் நல்ல துறையில் பணிவாய்ப்பு பெறலாம்.
இந்திய அரசியலமைப்பு, இந்தியப் பொருளாதாரம்,பொருளாதார அடிப்படை கணக்கீடுகள் மற்றும் பொது கணிதம், அறிவியல், வரலாறு ஆகியப் பாடங்கள் இருக்கும். இவற்றில் அடிப்படை முதல் படிக்க வேண்டும். படித்தவற்றை மாதிரி தேர்வில் எழுதிப் பார்க்க வேண்டும்.
ஏன் மாதிரி தேர்வு அவசியம்:
மாதிரி தேர்வு போட்டித் தேர்வுக்கு முன்னோட்டம் ஆகும். மாதிரி தேர்வை எழுதும் பொழுது நாம் செய்யும் தவறுகள், தேர்வில் ஏற்படும் குழப்பங்கள்,விடை அளிப்பதில் உள்ள மாற்றங்கள் நேர மேலாண்மை ஆகிய அனைத்தும் நாம் அறிந்து செயல்பட இந்த மாதிரித் தேர்வு உதவும். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வாய்ப்புக்கள் உள்ளன. தேர்வர்கள் அதனைப் பயன்படுத்தி வெற்றிப் பெறலாம்.
இந்திய அரசியலமைப்பு இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும். இந்தியாவின் முதல் அரசியலமைப்பு சபைக் கூட்டம் டிசம்பர் 9 1946 ஆம் ஆண்டு நடைபெற்றது.
இந்திய அரசமைப்புச் சட்டம் நவம்பர் 26 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 26 1950 இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை இந்தியா குடியரசு நாடாக கொண்டாடுகின்றது.
இந்திய அரசியலமைப்பு எழுதப்பட்ட சட்டம் ஆக்கப்பட்ட அரசியல் அமைப்பாகும். இந்திய அரசியலமைப்பு நெகிழும் மற்றும் நிலா தன்மை இரண்டையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.
இந்திய அரசியலமைப்பு உலகிலேயே மிக நீண்ட அரசியல் அமைப்பாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் கூட்டாட்சி என்ற சொல்லுக்கு பதிலாக யூனியன் என்று சொல் தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1946 அரசியல் நிர்ணய சபை தொடங்க அமைச்சரவைத் தூதுக்குழு பரிந்துரை செய்தது.
1946-ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது இது சபைக்கு தலைவராக ராஜேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 1947 ஆறு டிசம்பர் 11 கூட்டமானது நடைபெற்றது
இந்திய அரசியல் நிர்ணய சபை தேர்தல் ஜூலை 1946-ல் நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 1947 ஆகஸ்ட் 29 முதல் தொடங்கப்பட்டது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.