டிஎன்பிஎஸ்சி

இந்திய மொழியுடன் குரூப்2 தேர்வுக்கான பொதுஅறிவு!

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு படித்து கொண்டிருக்கும்  தேர்வர்களுக்கு  பொது அறிவு பாடத்தில்  இந்தியாவில் அங்கிகரிக்கப்பட்ட மொழிகள்
இந்தியா மொழிகளின் வண்ண மலர்பூங்காவாக மொழிகளின் எண்ணிக்கை அதிகப்படியாக  மக்களின் எண்ணிக்கையைப் போல் உள்ளது. இந்திய மொழிகளோடு ஆங்கிகேயரின் ஆட்சிகாலத்தில் இந்திய மொழிகளோடு ஆங்கிலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1930இல்  17 முக்கிய மொழிகளும் பல சிறு திறமான மொழிகளும் இந்தது. இந்திய விடுதலைக்குப் பின்  அரசியலமைப்பின்  வல்லுநர்களுக்கு மொழி பிரச்சனையை தீர்ப்பது சவாலக இருந்தது. இந்திய அரசியலமைப்பில் 1 தேசிய  மொழி, 2. அங்கிகரிக்கப்பட்ட  மொழிகள், துவக்க கல்வி நிலையில்  பயிற்று மொழி , ஆங்கில மொழியின் எதிர்காலம் பற்றி நிறைய கருத்துக்கள் அரசியலமைப்பு வல்லுநர்களிடையே நிலவியது.

மொழிகள் பட்டியல்கள்


இந்திய அரசியலமைப்பின் XVII  இல் 4 அத்தியங்களில் அங்கிகரிக்கப்பட்ட மொழிகள் பட்டியல்கள்:
சரத்து 343-344 இந்திய ஒன்றிய மொழிப் பற்றி கூறுகின்றது.
சரத்துகள்- 345–347 பிராந்திய மொழிகள்சரத்துகள்-348-349 உச்ச நீதிமன்ற மொழி
தேவநாகரி லிபியில் எழுதப்பட்ட இந்தி. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழி ஆகும். 344 (1)
சரத்து 345 பிராந்திய மொழிகள் பற்றியது இச்சரத்தின்படின் ஒரு மாநில சட்டமன்றம் அம்மாநிலத்தில் பேசப்படும் மொழிகளில் ஒன்றையோ அல்லது இந்தியையோ அல்லது பிற மொழிகளையோ ஆட்சி மொழியாக அங்கிகரிக்கலாம்.  அதுவரை ஆங்கிலம் அலுவலக மொழியாக செயல்படும்.
சரத்து 348 உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்கள், பிற நீதிமன்றங்களில் மொழிப் பற்றியது. நாடாளுமன்றம் நீதிமன்ற மொழியை முடிவு செய்யும் வரை ஆங்கிலம் நீதமன்ற மொழியாக நீடிக்கலாம்.


இந்திய அரசியலமைப்பில் 8வது அட்டவணைப்படி பின்வரும் 22 மொழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. மேற்கண்ட மொழிகள் 22 ஆட்சி மொழிகளில் 15 மொழிகள் இந்தோ-ஆரிய  2, திபெத்-பர்மிய, 1 முண்டா மொழி குடும்பம் சேர்ந்தவையாகும்.  2003 முதல்  இந்திய அரசாங்க குழு 8வது அட்டவணையில் காணப்படும் அனைத்து மொழிகளையும் இந்திய ஒன்றியத்தின் ஆட்சிமொழியாக அங்கிகரிக்கப்பட முயற்சிகள் இந்திய அரசாங்கம் முயன்று வருகிறது.

ஆட்சி மொழிக்கான சட்டம்: 


மொழியானது மாநிலம் அல்லது ஒன்றியம் போன்றவற்றின் தொடர்பை நெறிப்படுத்துகிறது மேலும் தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களின் தொடர்பு மொழியை ஆட்சி மொழிகள்  விதிகள் நெறிப்படுத்துகின்றன. தமிழ்நாட்டை பொருத்தவரை தொடர்பு  மொழியை ஆட்சி மொழிகள் சட்டமே நெறிப்படுத்துகிறது.

இந்தியை ஆட்சி மொழியாக கொண்டிருக்கும் மாநிலங்களில் இந்தியே தொடர்பு மொழியாக  இருக்கும். இந்தி பேசாத மாநிலங்களுக்கான தொடர்பு மொழி ஆங்கிலமாகவோ அல்லது ஆங்கில மொழி பெயர்ப்புடன் கூடிய இந்தியாகவோ இருக்கலாம்.

வினா:
1. இந்திய மொழிகள் குறித்து சரத்துக்கள் யாவை?
2. ஆட்சி மொழி சட்டம் பற்றி விளக்குக?
3 .  22 ஆட்சி மொழிகள் சேர்ந்த மொழி குடும்பம் விளக்குக?
4. தேவநாகரி மொழிப் பற்றி குறிப்பிடுக?
5. உச்சநீதிமன்றம் மொழி  எந்த சரத்தை சேர்ந்தது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *