இஞ்சியில் உள்ள மருத்துவ குணங்கள்…!
இந்திய உணவு முறைகளில் இஞ்சி தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அந்தவகையில், அனைவரது வீட்டின் குளிர்சாதன பெட்டியில் இன்றும், இஞ்சி இருந்து வருவதை பார்க்கலாம். அந்த வகையில் இஞ்சியில் உள்ள நண்மைகளை விரிவாக பார்க்கலாம்.
காய்ச்சல், தலைவலி மற்றும் மாதவிடாய் வலிகளுக்கு சிறந்த மருந்தாக அமைகிறது.
- இரத்த ஓட்டம் சீராகும்:-
இஞ்சி இதயத்தின் தசைகளை தூண்டி இரத்தை ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. மேலும் செல்லூலார் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதாகவும், தசைப்பிடிப்பு, பதற்றத்தை போக்க உதவுவதாக கூறப்படுகிறது. - அழற்சியை போக்கும்:
இஞ்சி அழர்சியை போக்கும் குணம் வாய்ந்தது, மேலும் தசை வலியையும் குறைக்கும். - வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க:
இஞ்சி வயிற்றைக் காலியாக்குவதை துரிதப்படுத்துகிறது, இது அஜீரணம் மற்றும் அது தொடர்பான வயிற்று அசௌகரியம் உள்ளவர்களுக்கு பயனளிக்கும். உங்கள் தினசரி உணவில் இஞ்சியை சேர்க்க 3 வழிகள்: - உங்கள் டீயில் இஞ்சியை சேர்க்கலாம்.
- இஞ்சி கலந்த தண்ணீருடன் உங்கள் நாளைத் தொடங்கலாம்.
- உங்கள் அன்றாட பருப்பு, சப்ஜி மற்றும் சூப்பில் இஞ்சியைச் சேர்க்கவும்.
ஆனால் எப்போதும் நினைவில் கொள்ளுங்கள், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மறவாதீர்கள்…