இஞ்சி பூண்டு உலர்பழ கோங்கூரா ஊறுகாய்
தினமும் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதினை உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் உடலுக்கு மிகவும் சிறந்தது. விரைவில் அறுவை சிகிச்சை ஏதாவது நடக்கப்போகிறது என்றால் இஞ்சி பூண்டு விழுதினை உணவில் சேர்ப்பதை தவிர்த்து கொள்ள வேண்டும். இஞ்சி பூண்டை தினமும் உணவில் சேர்ப்பதால் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதய பாதிப்புகளை போக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
கேன்சர் போன்ற நோய் தாக்காமல் தடுக்கும். வயதான காலத்தில் வரவேண்டி உடல்நல பிரச்சனைகளை முன்கூட்டியே வருவதை தடுக்க இஞ்சி பூண்டு விழுது உதவுகின்றன. இரத்த ஓட்டத்தை அதிகரித்து ஆண்மையை அதிகரிக்கச் செய்யும். அல்சர் மற்றும் கேன்சர் வருவதை தடுக்கிறது, உருவாவதை தடுக்க உதவுகின்றன.
சளி, ஆஸ்துமா பிரச்சனைகள் தீர்வதற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஒற்றை தலைவலி, பல் வலி, முதுகு வலி தசைகளில் உண்டாகும் வலிகள் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டவை. வயிறு உப்புசம், வாயு தொல்லைகள் வராமல் பாதுகாக்கின்றன.
இஞ்சி பூண்டு உலர் பழ கோங்கூரா ஊறுகாய்
தேவையான பொருட்கள் : பூண்டு விழுது ஒரு ஸ்பூன், புளிச்ச கீரை ஒரு கட்டு, பேரிச்சம்பழம் 5, அத்திப்பழம் 3 துண்டுகள், உலர்திராட்சை 7, இஞ்சி விழுது ஒரு டேபிள் ஸ்பூன், புளி சிறிய உருண்டை, காய்ந்த மிளகாய் 4, பொடித்த வெல்லம் ஒரு ஸ்பூன், பூண்டு 15 பல், கடுகு அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் கால் ஸ்பூன், நல்லெண்ணெய் 100 மில்லி, உப்பு தேவையான அளவு.
செய்முறை : புளிச்சக்கீரையை இலைகளை சுத்தம் செய்து எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இந்தக்கீரையை ஒரு நிமிடம் வதக்கி எடுத்து வைக்கவும். பின்னர் அதே கடாயில் பூண்டு பூண்டு பல் சிறிதளவு எண்ணெயில் வதக்கி, பேரீச்சம் பழம், அத்திப்பழம், உலர் திராட்சை, புளி, காய்ந்த மிளகாய் சிறிதளவு தண்ணீர் விட்டு ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பிறகு கீரையைத் தனியாக அரைத்து எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, இஞ்சி விழுது, பூண்டு விழுது சேர்த்து வதக்கி, புளிச்சக்கீரை விழுது, அரைத்த உலர் பழம் கலவை வதக்கி, பூண்டுப்பல், வெல்லம், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக கிளறி இறக்கவும். இந்த ஊறுகாய் சப்பாத்தி தடவி சாப்பிட பொருத்தமானதாக இருக்கும். இதை நீங்களும் வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.