சளிக்கு அருமருந்தாகும் இஞ்சி…!!
பச்சிளங்குழந்தை முதல் பருவ காலம் தகுந்தாற் போலவும், ஒவ்வொரு உடலுக்கு அடிக்கடி சளிபிடித்து கொள்ளும். மாதம் ஒருமுறை, இருமுறை என்று சளி புடித்து வாட்டும். சாப்பிட முடியாமல் குழந்தைகள் படும் அவஸ்த்தை சொல்லிமாயாது. இந்த மாதிரி அவஸ்தை இல்லாமல் ஆரோக்யமாக வைத்து கொள்ள உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும். காலத்திற்க்கு ஏற்ற உணவுகளை தேர்ந்து எடுத்து சாப்பிட இதை சரி செய்ய முடியும்.
அசைவம், சைவம்
மேலும், இஞ்சி அசைவம், சைவம் இரண்டிற்கும் சுவை கூட கூடியவை. இதை உண்பதால் எளிதில் ஜீரணமாகும். இதில் அறிய மருத்துவ குணம் உள்ளதால் அதிகம் பயன்படுத்து கின்றனர். அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் இஞ்சியை அளவாக சாப்பிட வேண்டும். ஒரு துண்டு இஞ்சியை தோல் சீவி கழுவி மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைத்து சாறு எடுத்து இதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, தேன் அல்லது சர்க்கரை கலந்து குடிக்க சளி தொல்லை நீங்கும் வாயு பிரச்சனை சரி ஆகும்.
உடல் வலி
பருப்பு அடிக்கடி சாப்பிடுவதால் ஏற்படும் வாயு தொல்லை அதனால் ஏற்படும் உடல் வலிகளை இந்த இஞ்சி சாறு சரிசெய்யும். இரவு பாலில் மிளகு தூள், மஞ்சள் தூள், சர்க்கரை கலந்து குடிக்க சளி குறையும். இஞ்சி சாறை மதிய உணவுக்கு முன் குடித்து விட்டு பத்து நிமிடத்தில் சாதம் சாப்பிடவும். இரவில் இஞ்சியை பயன்படுத்த கூடாது. வாரம் இரு முறை இஞ்சி ரசம் வைத்து சாப்பிட சளி தொல்லை இருக்காது.
உடனே நிவாரணம்
மாதவிடாய் தள்ளி போகாமல் இருக்க இதை முறையாக சாப்பிட்டு வர மாதவிடாய் மாத மாதம் சரியாக வர தொடங்கும். சளி இருந்தாலும் மாதவிடாய் தள்ளி போகும். இதற்கு இஞ்சி நிவாரணியாக இருக்கும். நெஞ்சு எரிச்சல் இருந்தால் இஞ்சி நீர் விட்டு காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குடிக்க உடனே நிவாரணம் கிடைக்கும். இஞ்சி கிழங்கு வகையை சேர்ந்தது அதனால் இதை உணவில் இணை பொருளாக சேர்க்கப்படுகிறது. இஞ்சி காய்ந்தால் கிடைப்பதே சுக்கு இதற்குரிய பயன் சுக்குக்கு உண்டு.
சளி கட்டுப்படும்
காலை முதல் மாலை வரை இஞ்சியும், மாலை இரவில் சுக்கை பயன்படுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. இஞ்சி சாப்பிட பசியை தூண்டி, உமிழ்நீரை பெருக்கும். உடலுக்கு வெப்பத்தை கொடுப்பதால் வாயுவை நீக்குகிறது. இஞ்சி தோல் சீவி சிறு துண்டாக நறுக்கி, தேனில் மூழ்க ஊறவிடவும். நன்கு ஊறிய இந்த துண்டை உணவுக்கு முன் ஒரு துண்டு சாப்பிட நல்ல பசி ஏற்படும். பிறகு உணவை சாப்பிடவும். இதை தொடர்ந்து ஒரு மண்டலம் சாப்பிட நரை, திரை, மூப்பு அணுகாது. தேகம் அழகாகவும், இளமையுடனும் காட்சியளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இஞ்சி சாறை இரண்டு வேலை மூன்று நாட்கள் ஐம்பது மில்லி பருக சளி கட்டுப்படும். ஐந்து நாட்கள் பருக சளியுடன் கூடிய இருமல் கட்டுபடும். இரவில் இந்த சாறை பருக வேண்டாம். இதற்கு பதில் சுக்கு சேர்த்து கொள்ளலாம்.