சமையல் குறிப்புவாழ்க்கை முறை

பாரம்பரிய உணவான பேமஸான சுவை, மணமான, இஞ்சி சட்னி

பாரம்பரிய உணவான இட்லி தோசைக்கு ஏற்ற பேமஸான இஞ்சி சட்னி. டைஜஸ்சன் ஏற்ற இஞ்சி சட்னி எப்படி செய்யலாம் இன்று பார்க்கலாம். இந்த சட்னியை 10 நிமிடங்களில் தயார் செய்து வைத்துக் கொண்டால், ஐந்து நிமிடத்தில் செய்து விடலாம்.

இந்தச் சட்னியை தோசை இட்லி உடன் சேர்த்து சாப்பிடும் போது அதிலுள்ள காரம், இனிப்பு சுவை உங்களின் நாவை சுண்டி இழுக்கும். இதன் சுவை மணம் உங்களை என்றென்றும் கவர்ந்து இழுக்கும்.

இஞ்சி செரிமானத்திற்கு நல்லது. இது தயாரிப்பது மிகவும் எளிதானது.

இஞ்சி சட்னி

தேவையான பொருட்கள் :எண்ணெய் 2 ஸ்பூன், கடலைப் பருப்பு இரண்டு ஸ்பூன், உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன், இஞ்சி தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்தது அரை கப்.

வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு கப், காய்ந்த மிளகாய் இரண்டு, புளி சாறு ஒரு ஸ்பூன். வெல்லம் சிறிதளவு, உப்பு தேவையான அளவு. கடுகு, உளுந்தம் பருப்பு ஒரு ஸ்பூன்.

இஞ்சிச் சட்னி செய்முறை விளக்கம் : ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வரும் வரை நன்கு வதக்க வேண்டும்.

பின்பு அதனை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது எண்ணெய் விட்டு துண்டுகளாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு வதக்கி வைக்கவும். பின்பு இதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கிக் கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் வறுத்த கடலைப் பருப்பு, உளுந்தம் பருப்பு மற்றும் இஞ்சி, வெங்காயம், புளி சாறு, வெல்லம் தேவையான அளவு உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு அதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு, சேர்த்து கறிவேப்பிலை போட்டு தாளித்து இஞ்சி சட்னியுடன் சேர்த்தால் சுவையான இஞ்சி சட்னி தயார்.

இட்லி தோசைக்கு நல்ல சைட் டிஷ் ஆக இந்த சட்னி செய்யலாம். ஆந்திராவில் பிரபலமான உணவுகளில் ஒன்று இஞ்சி சட்னி. இந்த செய்முறையை உங்கள் வீட்டில் முயற்சி செய்து பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *