காவல்துறையால் ஜிப்ரான் பாடல் வெளியீடு
சலாம் சென்னை! ஜிப்ரான் இசையில் பாடல் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. காவல் துறையுடன் இணைந்து இதனை வெளியிட்டார் ஜிப்ரான்.
கொரோனாவின் கோரத் தாண்டவத்தில் அயராது உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறும் வகையில் இதனை இயற்றியுள்ளார் ஜிப்ரான். கொரோனா என்ற வைரஸ் உலகமெங்கும் தாக்கி மனிதர்கள் திண்டாடும் அவலநிலை அனைவரும் அறிந்திருக்க காவல் துறை மருத்துவ துறை சுகாதாரத்துறை என இம்மூன்று துறையும் அயராது ஆற்றிய செயல் பாராட்டத்தக்கது.
18 செப்டம்பர் 2020 நேற்று மும்பை இண்டியன்ஸ் எதிர்த்து போட்டியிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது என்று செய்தி பலருக்கு அறியும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர்கள் ஜிப்ரானின் பாடலில் கொரோனாவை எதிர்த்துப் போராடும் அனைத்து துறையினருக்கும் நன்றி கூறினர்.
தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கொரோனா விழிப்புணர்வு பற்றிய காணொளி இந்த பாடலில் இடம்பிடித்திருக்கிறது. காவல்துறையின் நேரம் காலம் பார்க்காமல் அயராது உழைக்கும் உழைப்பு வணக்கத்துக்குரியது. அனாவசியமாக பொதுமக்கள் யாரும் வெளியில் அலைந்து திரிய கூடாது என்று இவர்கள் முற்படும் ஒவ்வொரு செயலும் நம் பாதுகாப்பிற்கு என்பதை அறிந்து செயல்பட வேண்டும்.
சுகாதாரத் துறையின் வருமுன் காப்போம் என்ற நோக்கத்துடன் செயல்படுகின்றனர். கோடை வெயிலின் கடுமை பாராமல் சென்னை நகரின் ஒவ்வொரு தெருவும் பிளீச்சிங் பவுடர் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்கும் பொறுப்பை தன் சிரசின் மேல் கொண்டு செய்யும் துப்புரவு தொழிலாளர்கள் போற்றுதற்குரியவர்கள்.
மருத்துவத் துறையினருக்கு நன்றி என்னும் வார்த்தை போதுமா! மேற்கூறிய துறையினர் தொற்று வராமல் கட்டுப்பாட்டுடன் இருக்க செயல்படுகின்றனர். ஆனால் இவர்களோ அன்றாட வைரஸுடனே சண்டை போட்டு வருகின்றனர். கொரோனா தொற்றோடு வரும் ஒவ்வொரு நோயாளிகளின் உயிரையும் காக்க இரவு பகல் பாராமல் அயராது உழைக்கின்றனர்.
அனைத்து மக்களின் மனதிலும் இவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி கூற வேண்டும் என்னும் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் சலாம் சென்னை என்ற பாடலில் வெளியிட்டுள்ளார் ஜிப்ரான்.