பெண்ணின் அழகை மெருகேத்தும் கூந்தலை பெற..!!
ஒரு பெண்ணின் அழகை கூந்தல் மூலமாகவும் மெருகேத்தலாம். பொடுகு தொல்லை இல்லாமல் பார்த்து கொள்வதால் தான் முகம் பொலிவாக இருக்கும். முகப்பரு வராமல் இருக்கும். எப்படி முடியை பராமரிக்கலாம் வாங்க பார்க்கலாம்.
ஒவ்வொருமுறையும் கூந்தலை குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்களாவது வார வேண்டும். ஒரு ஸ்பூன் வெந்தயம், ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைக்கவும். இந்த எண்ணெயை வாரம் இரு முறை தலையில் தடவி மசாஜ் செய்து குளிக்கவும். வாரம் ஒன்று அல்லது இரு முறை கூந்தலை வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் மூடி மூடி எடுக்கவும்.
வெள்ளை முள்ளங்கியை துருவி சாறு பிழிந்து கொள்ளவும். அதை தலையில் தடவி சிறிது நேரம் ஊறிய பின் கூந்தலை அலச வேண்டும். ஒரு கப் பவுடர், இரண்டு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, 2 ஸ்பூன் சீயக்காய் பொடி, அரை ஸ்பூன் வேப்பிலை பொடி, அரை ஸ்பூன் ஆரஞ்சு பழத் தோலை காய வைத்து அரைத்த பொடி, அனைத்தையும் ஆடை இல்லாத சிறிது தயிர் கலந்து, எலுமிச்சை சாறுடன் கலந்து சில நேரங்கள் தடவி தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற விட்டு போகிற வரை இதை வாரம் ஒருமுறை தொடர்ந்து செய்து வரலாம்.
தலையணை, தலையணை உறை, சீப்பு, டவல், ஹேர்பேண்ட் போன்ற எல்லாவற்றையும் தனித்தனியாக வைத்திருக்க வேண்டும்.
பொடுகு தொல்லை தீவிரமாக இருந்தால், சீப்பு ஒவ்வொரு முறையும் வெந்நீரில் போட்டு சுத்தமாக கழுவி வைத்து உபயோகிக்கலாம். எண்ணெய் அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்து விடுங்கள். பொடுகு காரணமாக தலையில் அரிப்பு இருக்கும். அதற்காக தலையை நகத்தால் சுரண்டிட கூடாது. சருமத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தலைக்கு குளிக்க வேண்டும். டென்ஷனை தவிர்க்க வேண்டும். எண்ணெய் பசை அதிகம் உள்ள அழகு சாதன பொருட்களை தவிர்த்து விடுங்கள்.
ஹார்மோன் கோளாறு, தவறான உணவு பழக்கம், அளவுக்கதிகமான உடல் பருமன், கிருமித் தொல்லை, நரம்புத்தளர்ச்சி மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சினைகள், டென்ஷன், பரம்பரைத் தன்மை தொடர்பான பிரச்சனைகளை, சுத்தம் இல்லாத கூந்தல் இவை போன்ற பிற காரணங்களாக இருக்கின்றன.
பொடுகு இரண்டு வகைப்படும். ஒன்று வறண்ட தன்மை உடையது. இன்னொன்று எண்ணைப்பசை உடனிருப்பது. முதல் வகை வெள்ளை நிறத்தில் செதில்களாக காணப்படும். உதிரம் தன்மை உடையது. இந்தவகை பொடுகு கவனிக்காவிட்டால் அதன் பின்விளைவாக சோரியாசிஸ் போன்ற சரும நோய்கள் வரக்கூடும். பருக்கள் ஏற்படவும் இது ஒரு முக்கிய காரணம்.
எண்ணெய் பசையான பொடுகு, கொஞ்சம் ஆபத்தானது இது பிசுபிசுப்பாக லேசான மஞ்சள் நிறத்துடன் ஒருவித நாற்றத்துடன் இருக்கும். குளிர் காலத்தில் பிரச்சினை அதிகமாக இருக்கும். பருவ வயதில் சிலவகை எண்ணெய் சுரப்பிகள் வேலை செய்யத் தொடங்குகின்றன. சிலருக்கு இது அதிகமாக சுரப்பதன் விளைவுகளில் ஒன்று.
காதுகளின் உட்புற முக்கிய பகுதிகளில், எண்ணெய் பசை அதிகம் காணப்படும். அழகான கூந்தலின் முதல் எதிரி பொடுகு. பிரச்சனையை நாட்டில் 80 சதவீதம் பேருக்கு இருக்கிறது. கூந்தலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பொடுகு வராமல் ஓரளவு பாதுகாக்க முடியும்.
ஆரம்பத்திலேயே சரியான அக்கறை எடுத்துக் கொண்டால் இப்பிரச்சனையை குணப்படுத்திவிடலாம். கவனிக்காமல் விட்டுவிட்டால் அரிப்பு எரிச்சல் கூந்தல் உதிர்வு வழங்கிய பிரச்சனைகள் வரக்கூடும். மேற்கூறிய அனைத்தும் செய்து இப்பிரச்சனை தீரவில்லை என்றால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.