இரும்பு சத்து உடனடியாக பெறனுமா?
வாரத்திற்கு மூன்று முறையாவது நாம் கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் உடம்பிற்கு தேவையான இரும்புச் சத்து கிடைப்பதுடன் முடி உதிரும். பிரச்சனைகளும் தீரும். முளைக்கீரை மசியல், கீரை மசியல் எப்படி செய்யலாம் வாங்க பார்க்கலாம்.
கீரை தக்காளி மசியல்
தேவையான பொருட்கள் : முளைக்கீரை ஒரு கட்டு, பெரிய வெங்காயம், தக்காளி, பூண்டு தேவைக்கு ஏற்ப.
செய்முறை : கீரையை ஆய்ந்து கழுவி சுத்தம் செய்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் வெங்காயத்தையும், தக்காளியையும் பொடியாக அரிந்து போட்டு, பச்சை மிளகாய், உப்பு, பூண்டு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக குழைய விடவும். தண்ணீர் சுண்டியதும், இறக்கி மத்தால் கடைந்து வைத்தால் மசியல் தயார்.
ஒரு வாணலியை சூடு செய்து எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றைத் தாளித்துக் கொட்டி இறக்குங்கள். சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிட குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.
முளைக்கீரை மசியல்
தேவையான பொருட்கள் : முளைக்கீரை ஒரு கட்டு, மிளகாய்வற்றல் 3, சாதாரண பால் ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு தலா அரை ஸ்பூன், எண்ணெய் 50 மில்லி.
செய்முறை : கீரையை நன்றாக கழுவி சுத்தப்படுத்தி பொடியாக அரிந்து கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, சீரகம், உளுத்தம் பருப்பு, கடுகு, மிளகாய் வற்றல் போட்டு வெடிக்க விட வேண்டும். பிறகு கீரையை போட்டு உப்பு சேர்த்து கிளற வேண்டும். கிண்டி கடைந்து கொள்ளவும். நன்றாக கரைந்ததும் பாலை ஊற்றி நன்றாக கிளறி இறக்குங்கள். கீரை மசியல் வாசம் ஆளை தூக்கும்.
வாரத்தில் மூன்று முறை கீரை உண்பதால் ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு விதமாக செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். கீரை மசியல் செய்யும் போது இதை சாப்பாட்டில் விரவி சாப்பிட டேஸ்ட்டாக இருக்கும்.