மென்மையாக மசாஜ் செய்ங்க.. மன அழுத்தத்தை குறைங்க!
மன அழுத்தத்தை குறைக்க தினமும் சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ங்க. பாதத்துக்கு சற்று வெளியே வரும் எலும்பு பகுதி. அதாவது கணுக்காலுக்கும், குதிகாலுக்கும் இடைப்பட்ட பகுதி. சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து விடுங்கள். முழு மணிக்கட்டுப் பகுதி. சுட்டு விரலுக்குக் கீழ் உள்ள உள்ளங்கை பகுதி. ஒவ்வொரு தோள்பட்டையின் உச்சிப் பகுதிகள். புருவங்களுக்கு நடுவிலுள்ள நெற்றிப்பொட்டு. இந்த பகுதிகளை தினமும் சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து விடவும்.
- ஒவ்வொரு தோள்பட்டையின் உச்சிப் பகுதிகள்.
- புருவங்களுக்கு நடுவிலுள்ள நெற்றிப்பொட்டு.
- இந்த பகுதிகளை தினமும் சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்து விடவும்.
மன அழுத்தமா எதற்கும் தயாராக
நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். ஆனால் மிக மோசமானது எதிர்பாருங்கள். எதற்கும் தயாராகவே இருக்க கற்றுக் கொள்ளுங்கள். இன்று என்பதை இனிய கையிருப்பு. அதை இனியதாக்குவதால் நாளை அது நல்லதாகவே நடக்கும். நம்ப முடியாததாக இருக்கட்டும். பிறரை மகிழ்வித்து பாருங்கள். உங்கள் மகிழ்ச்சி பெரிதும் பெருகும்.
மன அழுத்தமா வாழ்க்கை முறையை
உங்கள் தவறான முடிவுகளுக்காக உங்களை நீங்களே மன்னித்து விடுங்கள். மிகச்சிறந்த வாழ்க்கை முறையையும் தன்னிரக்கம் பாழ்படுத்திவிடும். ஒவ்வொரு நாளும் சில மணித்துளிகள் உங்கள் வாய்ப்புகளை எண்னுங்கள். இது உங்கள் கவலைகளை தூர ஓட்டும். ஒரு தவறு நடந்து விட்டால் இதற்கான வருத்தம் சொற்ப நேரமே இருக்கட்டும். தொடர்ந்து செல்லுங்கள். நடந்தது எண்ணி கொண்டிருப்பதால் பிரச்சினைகள் தீர்வதில்லை.
மன அழுத்தமா தருணங்களை மகிழுங்கள்
சிறுசிறு வெற்றிகளையும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழுங்கள். இந்த மாதிரியான மகிழ்ச்சியான தருணங்கள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள உதவுகிறது. நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள். சூழ்ந்துள்ள எல்லா நன்மைகளுக்கும் நீங்கள் மிகவும் பொருத்தமானவர், தகுதியானவர் என்பதை முதலில் நம்புங்கள். உங்களை எல்லோருக்கும் வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். வாழ்க்கை என்பது விளம்பர போட்டி அல்ல.