போருக்கு நடுவே ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும் ரஷ்ய எரிவாயு…!
தீவிர போருக்கு நடுவே எதவித சிக்கலும் இல்லாமலும் ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷ்யாவின் எரிவாயு செல்வதாக கூறப்படுகிறது.
ஐரோப்பா மற்றும் துருக்கி நாடுகளின் மிகப்பெரிய எரிவாயு சப்ளையராக Gazprom என்ற நிறுவனம் உள்ளது. இந்நிலையில் 4 வது நாளகா நீடித்து வரும் ரஷ்யா-உக்ரைன் இடையேயான போரால் ஐரோப்பிய நாடுகள் மிகப்பெரிய எரிவாயு பிரச்சனையையை சந்திக்கும் என சர்வதேச அரசியலை உற்று நோக்கும் வல்லுநர்கள் கூறி வந்தனர். மேலும் உலக நாடுகள் பல ரஷ்யா மீது தடைகளை விதித்தும் வந்தன.
இதனையடுத்து இன்று Gazprom நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்; வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு இணங்க, உக்ரைன் வழியாக ரஷ்யா எரிவாயு ஐரோப்பிய நாடுகளுக்கு சர்வ சாதாரணமாக தொடர்ந்து சப்ளை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி, ஐரோப்பிய நாடுகள் 107.5 மில்லியன் கன மீட்டர் எரிவாயு கோரிக்கையாக வைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் ஆதரவை பெற்று போரை தொடர்ந்து நடத்த உக்ரைன் அதிபர் திட்டமிடுவதாக சர்வதேச வல்லுநர்கள் கூறீ வருகின்றனர். மேலும் அவர் போரை முடிவுக்கு கொண்டு வர விரும்பவில்லை என்றும், உலக நாடுகளிடமும், மக்களிடம், இந்த போரின் மூலம் அனுதாபத்தை பெற மட்டுமே அவர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.