பூண்டு தொக்கு
பூண்டின் மருத்துவ குணம் காரணமாக ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும், ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.
பூண்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், விட்டமின் சி, பி6 மற்றும் கனிமங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகளில் இருந்து நிவாரணம் தருவதாக ஆய்வுகளில் கண்டறிந்துள்ளனர்.
பச்சை பூண்டை சாப்பிட்டால் கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை சரியாக செயல்படும் மற்றும் வயிற்று பிரச்சனைகளை நீக்கும். அஜீரணம், பசியின்மை போன்றவை நீங்கும். பச்சை பூண்டு மன அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அலுவலகத்தில் அதிக வேலைப்பளு இருப்பவர்கள் தினமும் பச்சை பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நல்லது.
நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைக்கும். இதய அடைப்பை நீக்கும். தொண்டை சதையை கட்டுப்படுத்தும். இத்தனை நன்மைகளை கொண்ட பூண்டை பூண்டு சட்னி, பூண்டு தொக்கு, பூண்டு குழம்பு, பூண்டு ஊறுகாய் என்று விதவிதமாக சமைத்து உண்ணலாம். பூண்டு தொக்கு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம் வாங்க.
பூண்டு தொக்கு
தேவையான பொருட்கள் : பூண்டு கால் கிலோ, மிளகாய் தூள் 4 ஸ்பூன், கொத்தமல்லி பொடி ஒரு ஸ்பூன், கடுகு ஒரு ஸ்பூன், வெந்தயம் ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை தேவைக்கேற்ப. ஹிங் பொடி 3 ஸ்பூன், புளி எலுமிச்சை அளவு, உப்பு தேவைக்கு ஏற்ப. நல்லெண்ணெய் 3 ஸ்பூன்.
செய்முறை : தோல் உரித்து பூண்டை முதலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். புளியை தண்ணீரில் ஊறவைத்து கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். கடுகு மற்றும் வெந்தயத்தை இளவறுப்பாய் வறுத்து பொடி செய்து வைக்கவும்.
பின்னர் எண்ணெயைக் காயவைத்து அதில் கடுகையும், வெந்தயத்தையும் சேர்த்து மற்றும் ஹிங் பொடி, பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். பச்சை வாசனை போன பிறகு பூண்டின் அரோமா வரும்.
இதில் மிளகாய் தூள், கொத்தமல்லி பொடி ஆகியவற்றை சேர்த்து பிரட்டி நன்றாக வதக்கி பச்சை வாசனை போனவுடன் புளி சாறு, உப்பு சேர்த்து ஆயில் பிரிந்து வரும் போது இறக்க வேண்டும். ஆற வைத்து ஒரு டப்பாவில் ஏர் டைட் கண்டெய்னரில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளவும்.