செய்திகள்தமிழகம்

காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம்

மகாத்மா காந்தியைத் தான் நாம் தேசத்தந்தை என்று அழைக்கிறோம். அகிம்சை வழியில் போராடி சுதந்திரக் காற்றை சுவாசிக்கச் செய்தார். காந்தியின் சத்யாகிரக இயக்கம் மற்றும் அகிம்சை வழியில் போராட்டம் ஆகியவை உலகம் முழுவதும் பிரபலமானது. ஆகையால், நாடு முழுவதும் அக்டோபர் 2ம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அன்று ஒரு நாள் அரவு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளுக்கு விடுமுறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கியத்துவம் வாய்ந்த

இதையடுத்து நாடு முழுவதும் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. முக்கியமாக ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 2ம் தேதி ஏன் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது என்று இங்கு பார்ப்போம்.

நம் நினைவில் காந்தி ஜெயந்தி

குஜராத் மாநிலம் போர்பந்தரில் கடந்த 1869ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி – புத்லிபாய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட மகாத்மா காந்தியை சுதந்திர தினம், குடியரசுத் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய தினங்களில் மட்டும் தான் நாம் நினைவில் கொள்கிறோம். இன்றைய தலைமுறையினர் பலருக்கும் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசிய தலைவர்களைப் பற்றி தெரியவில்லை. ஏன், அக்டோபர் 2ம் தேதி இவ்வளவு முக்கியத்துவம் வாயந்ததாக கருதப்படுகிறது என்பது குறித்தும் தெரிவதில்லை.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபைக்கூட்டம் நடைபெறவில்லை. இந்த நிலையில் நாளை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடத்தவேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

காந்தி ஜெயந்தி கிராம சபை கூட்டம்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அக்டோபர் 2ஆம் காந்தி ஜெயந்தி அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தவும், அனைத்து கிராம மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

சென்னை: காந்தி ஜெயந்தி தினமான நாளை அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா காலம் பாதுகாப்பு வழிமுறை

அனைத்து கிராம மக்களும் அறிந்துகொள்ளும் வகையில் அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்றும் முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கிராம ஊராட்சிகளில் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்திஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராமசபை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில், ஊராட்சியின் வரவு செலவுகள், திட்ட பணிகள், பயனாளிகள் தேர்வு செய்து, ஒப்புதல் பெறப்படும்.

கொரோனா காலம் என்பதால் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிப்பது கிராம சபை கூட்டம் நடத்தலாம் எனவும் கொரோனா பரவல் உள்ள பகுதிகளை பொறுத்து கிராம சபை கூட்டத்தை வேறொரு நாளில் நடத்தி கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *