2021 பட்ஜெட் நிதி ஒதுக்கீடு உயர வாய்ப்பு
பிப்ரவரி முதல் வாரத்தில் 2020-21 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர். கொரோனாவுக்கு பிறகான சுகாதாரத் துறைக்கான நிதி திட்டங்கள் இருக்கும். ரூபாய் 65 ஆயிரம் கோடியாக கடந்த பட்ஜெட்டில் சுகாதார துறை ஒதுக்கீடு இருந்தன.
கொரோனா தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் தொழில்நுட்ப வசதியின்மை காரணமாக நோயாளிகள் கல்லூரி, பள்ளி உள்ளிட்ட இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நுரையீரலை தாக்கும் கொரோனா தொற்று காரணமாக ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைக்கு அதிகம் தேவைப்பட்டது. பற்றாக்குறை ஏற்பட்டன.
சுகாதாரத்துறை 1.3 லட்சம் கோடி வரை நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டு இருந்ததாக தகவல் வெளியானது. இந்தியாவில் மட்டும் ஒரு கோடிக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா முதலிடத்தில் உள்ளன.