Audioசினிமா

வா ரே வா ஃப்ரெண்ட்ஷிப் அடுத்த அப்டேட்

பாஜ்ஜி பர்த்டேவை தொடர்ந்து சூப்பரான அப்டேட்ஸ்.

3 ஜூலை ஹர்பஜன் சிங் பிறந்தநாளையொட்டி பிரண்ட்ஷிப் படத்தின் போஸ்டரை வெளியிட்டு அந்தப் படத்தைப் பற்றிய ஒரு அப்டேட்டையும் வெளியிட்டுள்ளனர்.

பிரண்ட்ஷிப்

சென்னையில் ஒரு நாள் 2 படத்தை இயக்கிய ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் ஹர்பஜன்சிங் லோஸ்லிய ஆக்சன் கிங் அர்ஜுன் மற்றும் நகைச்சுவை நாயகன் சதீஷ் நடிக்கிறார்கள்.

ஜூன் மாதம் வெளியான ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரில் இது ஒரு கல்லூரி கதை என்ன தெரிய வருகிறது. போர்டில் பாடங்களும் அதனைத் தொடர்ந்து லைப்ரரியும் இதனிடையே லோஸ்லியா மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுனின் முகங்களும் கடைசியாக ஹர்பஜன் சிங் பௌலிங் போடுவதுமாக முடிந்துள்ளது. லோஸ்லியா கல்லூரி மாணவராகவும் ஹர்பஜன்சிங் பிரண்டாகவும் தோன்றும் வண்ணம் என்ற போஸ்டர் அமைந்துள்ளது

பிரெண்ட்ஷிப் படம் ஆகஸ்ட் 2020 வெளியிட இருந்ததால் ஹர்பஜன் சிங்கிற்கு இதுவே முதல் படம். ஹர்பஜன் சிங் டிக்கிலோனா படத்திலும் நடித்திருப்பதால் எது முதலில் வரும் என்று தெரியவில்லை.

எஸ்டிஆர் என்கிற சிம்பு பிரெண்ட்ஷிப் படத்தில் பாடிய முதல் சிங்கிள் பாடலை ஜூலை 4 இணையதளங்களில் நடன நாயகனான ராகவா லாரன்ஸ் வெளியிடுகிறார்.

வீ ஆர் வெயிட்டிங்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *