Videosசினிமா

நண்பர்கள் தின ஸ்பெஷல் பிரெண்ட்ஷிப் வீடியோ

ஒவ்வொரு நாடும் வெவ்வேறு நண்பர்கள் தினத்தை கொண்டாடுது. நம்ம இந்தியால பிப்ரவரி 14 காதலர் தினமாக கொண்டாடுகிறோம் இதே தேதியில பின்லாந்து நண்பர்கள் தினமாக கொண்டாடுது. இப்படி பலதரப்பட்ட நாட்கள் இருந்தாலும் சர்வதேச நண்பர்கள் தினம் ஜூலை 30 கொண்டாடுறாங்க.

அந்த சர்வதேச நண்பர்கள் தினத்தை ஒட்டி பிரண்ட்ஷிப் படக்குழுவினர் படத்தைப் பற்றிய வீடியோ ஒன்றை யூடியூப்பில் வெளியிட்டுள்ளாங்க. ஹர்பஜன் சிங் லோஸ்லிய ஆக்சன் கிங் அர்ஜுன் சதீஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படம் மக்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கு.

கிரிக்கெட் வீரர் சூப்பரான பந்துவீச்சாளர் இந்திய அணியின் பாஜி ஹர்பஜன் சிங் திரையுலகில் களமிறங்கும் முதல் படம் பிரண்ட்ஷிப். பிக்பாஸ் புகழ் லோஸ்லியா தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை பெரிதாக திரட்டி இருக்காங்க. அந்த ரசிகர் கூட்டம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு தன் நாயகியை ரசிக்க காத்துட்டு இருக்காங்க. கதாநாயகனுக்கு மட்டும் இல்லங்க கதாநாயகிக்கும் இதுதான் முதல் படம்.

இந்தப் படத்தோட இன்னொரு ஸ்பெஷாலிட்டி என்னன்னா ரெண்டு இயக்குனர் சேர்ந்து இயக்குறாங்க. ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி ஷேண்டோ ஸ்டுடியோ மற்றும் சினிமாஸ் ஸ்டுடியோஸ் தயாரிச்சு இருக்காங்க.

பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும் இளைஞராக வரும் ஹர்பஜன் சிங் தலைவர் ரஜினிகாந்த் ரசிகராக இருக்க அந்த இடத்தில் வரும் பாடலை விண்ணைத்தாண்டி வருவாயா நாயகன் சிம்பு பாடியுள்ளார். இந்தப் பாடலை ராகவா லாரன்ஸ் அண்மையில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது சர்வதேச நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இவர்கள் வெளியிட்டுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் காட்சிகள் ஹர்பஜன் சிங் சதீஷுடன் இருக்கும் நட்பு மற்றும் லோஸ்லியா உடன் காதல் காட்சிகளும் ஆங்காங்கே ஆக்சன் கிங் அர்ஜுன் கொடுக்கும் பயங்கரமான லுக் அவர் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பாரோ என யூகிக்கும் வண்ணம் இருக்குங்க.

நீங்களும் அப்படியே வீடியோவ பார்த்துட்டு உங்களோட கற்பனைகளை செஞ்சிட்டே இருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *