நட்பு ஒர் இசை பயணம்
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!
“நினைத்தாலே நிலவை பிடிப்போம்
வாடை காத்து பாடும் பாட்டு காதல் கேளு தூள் கிளப்பு
நேற்று இன்று நாளை நம் நாளே”
எல்லா நாளும் நண்பர்கள் தினமா இருந்தாலும் ஆகஸ்ட் முதல் சண்டே ஃப்ரெண்ட்ஷிப் டே வா கொண்டாடுறோம். இந்த நாள ஸ்பெஷலாக மாதிரி ஒரு இசை சங்கமம் பார்ப்போமா!
“ராமர் ஆனாலும்
பாபர் ஆனாலும் ரூட்டு
ஒன்னு தான் கேட்டு
ஒன்னு தான் ஸ்நேகிதா”
நம்ம கமல்ஹாசன் நடிப்பில் ஷாருக்கான் நண்பனோட ஹேராம் படத்தில் பிரெண்ட்ஷிப் எல்லா மதமும் சம்மதம்; ஃப்ரெண்ட்ஷிப் இந்த உறவுகளுக்கு அப்பாற்பட்டது இனம் மொழி ஜாதி எந்தவித தடையும் இல்லாம ஒருவர் இன்னொருத்தரோட தன்னுடைய வாழ்க்கையை பகிர ஒரு நல்ல இணைப்பு.
“நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கு எல்லை இல்லையே”
தோள் கொடுக்கும் நண்பன் இருந்தால் நம்மை தாக்கும் படையையே வெல்லலாம். ‘நான் இருக்கிறேன்’ என்று சொல்லும் உறவுகள் சில அதை மனதிலிருந்து சொல்வது சிலவற்றிலும் சில.
“தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரத்தில் பூத்திட்ட தொப்புள் கொடி
காதலை தாண்டியும் உள்ள படி
என்றும் நட்புதான் உயர்ந்தது பத்து படி”
ஒன்றுவிட்ட அண்ணன் தங்கையை கூட நம் உடன் பிறப்பாக கருத மாட்டோம் ஆனால் வேற்றுக் தாயின் மகன்/மகள் இருப்பவர்கள் நமக்கென்று நண்பனாக அமையும் பொழுது அண்ணனாக தம்பியாக அக்காவாக தங்கையாக நம் உடன் பிறப்பாக கருதும் எண்ணம் எங்கிருந்து வருகிறது!
“பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே“
முறியும் உறவுகளுக்கு தோள் கொடுப்பான் நண்பன். அந்த நட்பின் பயணம் சுடுகாட்டையும் தாண்டி வரும். நண்பர்களின் பயணத்துடன் இசை பயணம் தொடரும்.