ஆசிரியர் நண்பன் ஆவதும்; நண்பன் ஆசிரியர் ஆவதும்
ஆசிரியர்கள் நண்பர்களாக இருப்பது மிகவும் அதிர்ஷ்டம். பரீட்சை நேரத்தில் நண்பர்கள் ஆசிரியர்களாக மாறுவது மிகமிக அதிர்ஷ்டம். அனைவரிடமும் ஒரு விதமான ஆசிரியரின் குணம் இருக்கின்றன. கற்பிப்பது யாராக இருந்தாலும் ஆசானாக மாறுகிறார்.
தற்போது நிலைமையில் கண்டிப்பு மாணவர்களுக்கு பாடத்தை கற்பிப்பதில்லை. அரவணைப்பும் அவரவர் பாணியில் ஜாலியாக கற்பிப்பதையே மாணவர்கள் விரும்புகின்றனர். இப்படி ஆசிரியர்கள் காலத்திற்குத் தகுந்தாற்போல் விட்டுக் கொடுத்து தம்மை மாற்றிக்கொண்டு மாணவர்களின் முன்னேற்றமும் வெற்றியையுமே தனது லட்சியமாகக் கொண்டு உழைக்கின்றனர்.
அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு மாணவர்கள் என்ன பதில் மரியாதை செய்கிறார்கள்!
நன்றியும் வாழ்த்தும் கூறா விடினும் அந்த மாணவன் வெற்றிகரமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தாலே அந்த ஆசிரியர்களுக்கு நல்ல மகிழ்ச்சி அளிக்கும். நல்ல பதவியில் தன் மாணவன் இருப்பதைக் கண்டு இவர் என்னுடைய மாணவன் என்று பெருமையாக கூறும் தருணங்களே ஆசிரியர்களுக்கு தரும் மரியாதை.
மாணவர்கள் எந்தப் பதவியை அடைந்தாலும் தலைகனம் ஏறாது வாழ்க்கையில் எந்த நிலையிலும் தம் ஆசிரியர்களை பார்க்கும்போது கூறும் வணக்கம் ஆசிரியர்களுக்கு அளிக்கும் பெரிய மரியாதை.
வார்த்தைகள் கூறும் பாடத்தை விட திரைப்படப் பாடலின் மூலமாக சொல்லும் கருத்து பலரின் மனதில் நீக்கமற நிற்கும். உலகநாயகன் கமலஹாசன் நடித்த நம்மவர் படத்தின் பாடல் இதோ.
சொர்க்கம் என்பது நமக்கு
சுத்தம் உள்ள வீடு தான்
ஒருவன் சான்றோர் என அவனின் செயலில் தெரியும்.
சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பைமேடு தான் உலாவும் நிலாவில் வெள்ளை அடிக்கலாம் எங்கேயும் எப்போதும் சுத்தப்படுத்தலாம்
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாணவர்கள் கவிஞனாக ஓவியராக மாறிய காலம் பொன் போன்றது. ஆனால் அதை மறந்து விடுத்து கெட்ட வழியில் செல்லும் அவல நிலையும் நிலவுகிறது.
குளிக்கும் அறைக்குள் கெட்ட கெட்ட வார்த்தைகள்
படிக்கும் மனத்தில் என்ன ஆசைகள்
இதற்கா இதற்கா கல்வி கற்கும் சாலைகள்
எதற்கா எதற்கா இந்த வேலைகள்
மீதியாக வந்த பக்கம் போதை ஏற மாத்திரை
படித்தவனுக்கும் விலங்கிற்கும் வித்தியாசம் இல்லாமல் நடந்து கொள்ளும் சமுதாயமாக மாற காரணம் என்ன!
படிக்கும் படிப்பு நல்ல பண்பை ஊட்டலாம்
ஒழுங்காய் நடக்கும் பாதை காட்டலாம்
உனக்கும் எனக்கும் ஆடு மாடு தேவல
உனை போல் எனை போல் கெட்டு போகல
நல்லவங்க கூட இப்போ கெட்ட வார்த்தை ஆனது
ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்தால் உலகை வெல்லலாம்.