இந்தியன் மனதில் நீங்கா இடம் பெற்ற நேதாஜி பிறந்த தினம்
ஒவ்வொரு இந்தியனின் மனதளவில் மரியாதையோடு அழைக்கப்படுபவர் நேதாஜி. ஜனவரி 23, 1897-ம் ஆண்டு கட்டாக் நகரில் பிறந்தார் சுபாஷ் சந்திரபோஸ். நம்பிக்கை இழக்கும் வரை தோல்விகள் வருவதில்லை என்று விவேகானந்தரின் வேதவாக்கு தாரக மந்திரமாகக் கொண்டவர் நேதாஜி. பள்ளிப்படிப்பில் மாநிலத்தில் 2வது இடம் பிடித்தார்.
தந்தையுடைய ஆசைக்காக ஐசிஎஸ் தேர்வு லண்டனில் எழுதினார். வெற்றி பெற்று வேலை கிடைத்ததும் ஆங்கிலேயரின் அடிமை வேலை பார்க்க விரும்பாமல், இப்பதவியை தூக்கி எறிந்த முதல் இந்தியராக நேதாஜி திகழ்ந்தார். 25 வயதில் நகரசபை கமிஷனர் ஆனார். நேதாஜியின் செல்வாக்கு உயர்வதை விரும்பாத ஆங்கிலேயர்கள் இவரை அடிக்கடி சிறையில் தள்ளியது.
அதன்பிறகு உடல் நிலை மோசமானது. இந்தியாவில் இருக்க வேண்டாம் என நிபந்தனையுடன், நேதாஜியை ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பியது. 1937 தடை நீக்கிய பின்னர் இந்தியா வந்த நேதாஜி காங்கிரஸ் கட்சி தலைவர் ஆனார். அதன் பிறகு சிறைப்பட்டார். இரண்டாம் உலகப்போரை இந்திய விடுதலைக்காக பயன்படுத்த வேண்டும் என்கிற உத்தேசத்தில் ராணுவப் போருக்குத் தயார் ஆவதற்காக சிறையிலிருந்து தப்பினார்.
இந்திய எல்லையில் இரண்டு லட்சம் ஜப்பானியரும் 6,000 இந்தியர்களும் ஆங்கிலேயர்களுடன் போரிட்டனர். எதிர்பாராதவிதமாக மழை வந்ததால், போர்க்களம் சேறும், சகதியுமாக மாறின. அமெரிக்க விமானப் படை ஜப்பானியர்களை கொன்று போட்டன. மருத்துவ வசதிகளும் இல்லாமல் இந்தியப் படை போரிட்டது.
எலும்பு தோலுமாக திரும்பிய இந்தியர்களை கண்டு ரத்தக் கண்ணீர் வடித்தார் நேதாஜி. தோற்று விட்டதாகவும் தோல்வியில் இருந்து மீளவே முடியாது என்று கதறிய நேதாஜி. ரஷ்யாவின் ஆதரவை பெற மனம் தளராமல் விமானம் ஏறினார். மாபெரும் சாம்ராஜ்யத்தை அசைக்கும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டாலும், அவற்றை தோல்வியாக கருதாமல் நம்பிக்கையோடு அடுத்த முயற்சியில் இறங்கியதால் தான் ஒவ்வொரு இந்தியன் மனதிலும் நேதாஜி இன்றளவும் வாழ்கிறார்.