இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.
பிற நாடுகளை ஒப்பிடும் போது நாம் கொரோனா எதிர்த்து சிறப்பாகவே செயல்பட்டு கொண்டிருக்கிறோம். லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றி இருக்கிறோம்.
கரீப் கல்யாண் திட்டம் மூலம் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள், உணவு வழங்கும் திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது. 5 கிலோ அரிசி அல்லது கோதுமையுடன் ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட உள்ளது.
பொது முடக்கம் தளர்வுகள் இருந்தாலும் முன்பை விட நாம் எச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம். சிறிய தவறுகளுக்கு அதிக விலை கொடுக்க நேரிடலாம் என பிரதமர் மோடி எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
தன்னுடைய உரையில் பிரதமர் மோடி அரசின் விதிமுறைகளை மீறுவோருக்கு கடுமையாக தண்டிக்க படுவதாக அறிவித்தார். நாட்டில் யாரும் சட்டத்தை விட உயர்ந்தவர்கள் அல்ல. சட்டத்துக்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் பாதிப்புகாக இந்தியாவில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட மார்ச் மாதம் முதல் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றி வந்தார்.
இன்றும் நாட்டு மக்களிடையே உரையாற்றிக் கொண்டிருக்கிறார். எதிர்த்துப் போராடும் சூழலில் பருவமழை காலம் தொடங்கி விட்ட நிலையில் காய்ச்சல், சளி உள்ளிட்டவை வரும் என்பதால் மக்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொது ஊடகத்தின் இரண்டாம் கட்டமான அன்லாக் 2.0 தொடங்கி விட்டது. பொது முடக்கத்தை பல இடங்களில் சரியாக பின்பற்றாமல் உள்ளனர் என்று வருத்தத்தை தெரிவித்துள்ளார்.