நான்காம் கட்ட ஊரடங்கு நாங்க ரெடி…
தமிழகத்தில் மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகின்றது. இந்த நான்காம் கட்ட ஊரடங்கு மெல்ல மக்களை வெளியே எட்டிப்பார்க்க அனுமதித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் தமிழ் நாட்டில் 12 மாவட்டங்களுக்குச் சென்னை, திருவள்ளுர், காஞ்சிப்புரம், ராணிப் பேட்டை போன்ற மாவட்டங்களுக்குத் தளர்வு இல்லை என்பதை அரசு உறுதி செய்துள்ளது. இங்கு கொரானா தொற்று அதிகரிப்பு காரணமாக இது தொடர்கின்றது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வேன்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஆகியவற்றில் மக்கள் கூட்டமாகப் பயணிக்க முடியாது. ஒவ்வொரு பஸ்களிலும் குறைந்த பட்சம் 20 பேர் மட்டும் பயணிக்க முடியும். அத்துடன் மின்சார ரயில், பெட்ரோ ரயில்களின் தடைகள் தொடர்கின்றன.
மேமாதம் 31 வரை நான்காம் ஊரடங்கு நான்காம் கட்டத்தைத் தொடர்ந்து நாம் ஊரடங்குடன் பயணிக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட 12 மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் இந்த ஊரடங்கில் தளர்வானது அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி 32 பிரிவுகளில் தளர்வு என்பதை மாநில அரசு அறிவித்துள்ளது.
இதன்படி தமிழகம் மிகவும் கண்காணிப்பாக இருக்க வேண்டும் என்பதை நாம் தமிழக அரசு உறுதி செய்துள்ளது. தமிழ் நாட்டின் 12 மாவட்டங்களைத்தவிர மற்ற மாவட்டங்கள் தளர்வை அனுமதிக்கலாம்.
தளர்வு விவரங்கள்:
குறிப்பிட்ட 12 மாவட்டங்களைத்தவிர மற்ற தென் மாவட்டங்கள் மத்திய மாவட்டங்கள் தமிழ் நாட்டில் தளர்வுக்கு உட்படுகின்றன.
மாவட்டங்களுக்கு ஈ பாஸ் என்பது அவசியம் என்பதை தெரிவித்துள்ளன.
தொழில் சாலைகளில் 100 எண்ணிக்கையில்தான் அலுவலகம் பயன்படுத்தலாம். காரில் 2 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும், டாக்ஸியில் ஈ பாஸ் இன்றி பயணிக்கலாம். வேன்களில் 7 பேர் மட்டும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்லுரிகள், மால்கள், தியேட்டர்கள் அனைத்தும் இயங்காது இந்த ஊரடங்கு டிசம்பர் வரை செல்லலாம் என்கின்றது வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதன் மூலம் மக்கள் சுய கட்டுப்பாடு, தனிமைப்படுத்தலில் இருக்க வருடம் முழுவதும் பழகிக் கொள்ள வேண்டும்.
இந்த நேரத்தில் பணக்கொள்கை பொது மக்கள் அறிய வேண்டும். வீட்டிலிருந்து தன்னிறைவு பண்டங்களைத் தயாரித்துப் பழக வேண்டும். பண்டமாற்றங்கள் கூட இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் பிரபலமாக வாய்ப்புள்ளது. பள்ளிகள் எல்லாம் மீண்டும் இயங்க வேண்டுமானால் முக்கியமாக இந்த நோய்த்தொற்று பரவல் குறைய வேண்டியது அவசியமாகும். பொதுமக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியே சென்று வரலாம்.