இந்தியாவிற்கு அடுத்த அதிர்ச்சி. முன்னாள் ஜனாதிபதி காலமானார்.
முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். இந்திய எல்லையில் கடுமையான நிலவரம் நிகழ்ந்து வர இந்தியாவின் தலைநகரில் துக்ககரமான செய்தி மக்களை மேலும் பாதிக்கிறது.
இன்று திங்கட்கிழமை காலை திடுக்கிடும் தகவலாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் நிலமை மோசமான நிலையை அடைய தீவிரமான சிகிச்சை அளித்தும் பயன் இல்லாமல் நுரையீரல் பாதிக்கப்பட்டு செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டு காலமானார் என ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
பிரணாப் முகர்ஜியின் அரசியல் பயணம் 1969 ல் மிட்னாபூரில் நடந்த இடைத்தேர்தலில் மேற்கு வங்கத்தில் தொடங்கியது. இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையில் காங்கிரஸ் சீட்டில் தேர்ந்தெடுக்க அச்சமயம் பிரதமராக இருந்த இந்திரா காந்தி இவருக்கு உதவினார்.
அரசியலில் நல்ல வளர்ச்சி கண்டு இந்தியாவின் 13-ஆவது ஜனாதிபதியாக இருந்தவர் பிரணாப் முகர்ஜி அவர்கள். 2012 முதல் 2017 வரை ஜனாதிபதியாக பணியாற்றினார் பிரணாப் முகர்ஜி. பாரத் ரத்னா விருது பெற்ற உயர்ந்த உள்ளம் படைத்த பிரணாப் முகர்ஜியின் இறப்பு இந்தியாவிற்கு பெரிய இழப்பு.
இவரின் இழப்பிற்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக இவருடன் தன்னுடைய அனுபவங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
10 ஆகஸ்ட் 2020 பிரணாப் முகர்ஜி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அதற்கு ஒரு வாரம் முன்பு தன்னை சந்தித்த மற்றும் தான் சந்தித்த மக்கள் அனைவரையும் கொரோனா தொற்று பரிசோதனை செய்து கொள்ளுமாறும் அறிவுருத்திருந்தார்.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க வென்டிலேட்டரில் இருந்தார். தொடர்ச்சியாக சிகிச்சை அளித்து வந்த நிலையில் சமீபத்தில் கோமா நிலைக்கு சென்றார்.
கோமாவில் இருந்தவர் வென்டிலேட்டரில் வைக்கப்பட்ட நிலையில் நுரையீரல் பலவீனமாக இருக்க செப்டிக் அதிர்ச்சி ஏற்பட்டு 31 ஆகஸ்ட் 2020 முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார் என ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
1935-2020 தன்னுடைய 84 வருட வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்ந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.