Deep and healthy sleep foods : ஆழ்ந்த நிம்மதியான தூக்கத்திற்கு உத்தரவாதம் தரும் உணவுகள்
ஒரு மனிதனின் ஆரோக்கியத்திற்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதைவிட தூக்கம் ஒரு காரணியாக உள்ளது. நாம் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் நிம்மதியாக தூங்கி எழுந்தால் நம் உடலில் உள்ள பல நோய்கள் காணாமல் போய்விடும். ஆனால் இப்பொழுது அப்படி யாரும் சரியான நேரத்தில் தூங்குவதுமில்லை சரியான நேரத்தில் எழுவதும் இல்லை. ஒரு மனிதன் இரவு தூங்கும் சரியான நேரம் 10 மணி ஆகும். காலை எழுந்திருக்கும் சரியான நேரம் 6 மணி ஆகும். ஆனால் இந்த நேரத்தை இப்பொழுது நாம் யாரும் கடைபிடிப்பதில்லை. இரவு லேட்டாக உணவு உண்பது அதன் பின் செல்போனை பார்த்து கொண்டே நாம் தூங்குவதற்கு 12 அல்லது ஒரு மணி ஆகிவிடுகிறது பின்பு காலையில் எட்டு மணி அல்லது 9 மணி சிலபேர் பத்து மணிக்கு கூட எழுந்திருக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
வழக்கத்திற்கு மாறாக நாம் செய்யும் இந்த செயல்களை நம் உடலில் பல சிக்கல்களை உண்டாக்குகிறது சரியான நேரத்தில் தூங்காமல் உள்ள பலருக்கு உடல் சோர்வு, மன அழுத்தம், கண்ணில் கருவளையம் தோன்றுதல், எப்பொழுதும் சோர்வாக எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் இல்லாமல் காணப்படுதல், எதற்கு எடுத்தாலும் டென்ஷன், யாருடனும் பேசாமல் தனிமைகள் இருப்பது, ஞாபக மறதி போன்ற பல பிரச்சனைகளை சரியான தூக்கம் இன்மை ஏற்படுத்துகிறது.
நாங்கள் சரியான நேரத்திற்கு தூங்க வேண்டும் என்று தான் நினைக்கிறோம் ஆனால் எங்களுக்கு தூக்கம் வருவதில்லை காலையில் எழுந்திருக்கும் நேரமும் தாமதமாகி விடுகிறது நாங்கள் என்ன செய்வது என்று புலம்புபவர்களுக்கு எளிமையான வழிமுறைகளை இந்த பதிவில் பார்ப்போம். இந்த பதிவானது உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நிம்மதியான உறக்கத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்
நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கும் உணவுகள்
- அடிக்கடி நமது உணவில் மாம்பழம் சேர்த்துக் கொள்ளலாம். மாம்பழமானது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு திறன்களை அதிகரிப்பதுடன் நிம்மதியான உறக்கத்திற்கு வழிவகுக்கிறது.
- தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளதால் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்திலும் அறிவுத்திறன் செயல்பாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த நாளமும் அறிவு திறனும் ஆரோக்கியமாக இருந்தால் நிம்மதியான தூக்கம் ஏற்படும்.
- ஆழ்ந்த தூக்கத்திற்கும், அதிக நேரம் நீங்கள் எந்தவித இடையூறும் இன்றி நிம்மதியாக தூங்குவதற்கும் நமது உடலில் உள்ள மெலட்டோனின் ஹார்மோன் உதவுகிறது. இந்த ஹார்மோன் உயிரியல் கடிகாரங்களை கட்டுப்படுத்த கூடியது. செர்ரி பழங்களில் அதிக மெலட்டோனின் ஹார்மோன்கள் உள்ளதால் தூக்கம் வராமல் அவதிப்படும் நபர்கள் செர்ரி பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வர நிம்மதியான தூக்கத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.
- தூக்கத்தை அதிகம் தூண்டும் மத்தி,சூரை வகை மீன்களை அடிக்கடி சாப்பிட்டு வர தூக்கத்தை தூண்டும் சக்தியாக உள்ளது. மத்தி மற்றும் சூரை வகை மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம், வைட்டமின் B6 ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுவதால் ஆழமான தூக்கத்திற்கு உதவுகிறது.
- தூக்கத்தை அள்ளித் தருகின்ற தன்மை கொண்ட ட்ரிப்டோபன் என்கிற அமினோ அமிலம் முந்திரி வால்நட் ஆகிய நட்பு வகைகளில் அதிகம் காணப்படுவதால் தினமும் நீங்கள் உறங்குவதற்கு முன் வால்நட் முந்திரி ஆகிய நட்ஸ்களை ஐந்து அல்லது ஆறு சாப்பிட்டு வர நல்ல தூக்கம் கிடைக்கும்.