பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன?? மகளிற்காக..!!
மகளிர் தன் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தில் இருந்து நம்மை பாதுகாக்க என்னென்ன உணவுகளை தினமும் உணவில் எடுத்து கொள்ளலாம். ஒவ்வொரு பெண்ணும் தன் சருமத்தையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்து கொள்வது அவசியம். பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன, அதன் விளக்கத்தையும், இந்த பதிவில் அதை பற்றி பாப்போம்.
உடலின் ஆற்றல்
காய்கறிகளுடன், பழங்களில் ஏதோ ஒரு பழத்தை தினமும் ஒன்று உண்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். நார்சத்து, வைட்டமின், கார்போஹைட்ரேட் சத்துள்ள உணவுகள் தானியங்களை உட்கொள்ள வேண்டும். இதனால் உடலின் ஆற்றல் உற்பத்தி அதிகம் ஆகும். மீன், முட்டை , எள்ளு, கீரை உணவில் அதிகம் சேர்த்து கொள்வதால் இரும்பு சத்துகிடைக்கும்.
தசைகள் வலிமையாக
இரும்பு சத்து கிடைப்பதால் மாதவிடாய் நேரங்களில் ஏற்படும் வலிகள், சோர்வு நீங்கும். இதயம் பாதுகாப்பாகவும், தசைகள் வலிமையாகவும் இருக்க பால் சார்ந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இன்றைய தலை முறையினர் பால் சார்ந்த உணவுகளை ஒதுக்கி விடுகின்றனர். பால், தயிர், சீஸ் அவசியம் உண்ண வேண்டும். இதில் கால்சியம் நிறைந்து உள்ளன.
ஹார்மோன் மாற்றத்தை சரி செய்ய அதிக வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக நட்ஸ் மற்றும் மீன் எடுத்து கொள்ளலாம். அவகோடா, கேரட், பீட்ரூட் அதிகம் சேர்த்து கொள்வதால் நரம்பு மண்டலம் பாதுகாப்பாக இருக்கும். ப்ரோக்கோலி, க்ரீன் டீ சேர்ப்பதால் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கப்படும்.
கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு
பெண்களுக்கு ஏற்படும் நீர்க்கட்டி, கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு எண்ணெய் நிறைந்த உணவுகள் மற்றும் அதிக படியான நெய் சேர்ப்பதை தவிர்த்து விடவும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு எட்டு டம்பளர் நீர் அவசியம் பருகவும். இதனால் உடலில் பல வியாதிகள் குணம் ஆகும். சருமம் பாதுகாக்கப்படும்.
நோய் எதிர்ப்பு சக்தி
பெண்களின் ஆரோக்யம் பிற்காலத்தில் அவர்களின் பேறுகாலத்திற்கும், வயதான பருவத்திலும் தன் சக்தியை பேணி காக்க ஒவ்வொரு பெண் பருவத்தினருக்கு தன் இளம் வயதிலேயே அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து உணவுகளை சரியான விகிதத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இதை மகளிர் ஆன நீங்களும் உணர்ந்து, உங்கள் பிள்ளைகளுக்கும் சிறு வயதிலே பழக்க படுத்துங்கள். வெளியில் போனால் தேவையற்ற உணவுகளை பெண் பிள்ளைகளுக்கு வாங்கி தராதீர்கள்.
ஒவ்வொரு பெண்ணும் வைட்டமின், இரும்பு சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம் நிறைந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உங்கள் ஆற்றல் பெருகி, ஆரோக்கியமான வாழ்வு வாழ முடியும்.
Pingback: அழகை மேம்படுத்தணுமா…?? இதோ உங்களுக்காக.. | SlateKuchi