திருப்பூர் ரேஷன் கடைகளில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத் துறையினர்; பாக்கெட் பொருளுக்கு தடை
பாக்கெட் உணவு பொருட்ககளில், தயாரிப்பு, காலக்கெடு, எடை அளவு இல்லாத மளிகை பொருட்கள் ரேசன்கடைகளில் இருந்து அகற்றம்
அனைத்து ரேசன்கடை விற்பனையாளர்களுக்கும் மேற்கண்ட மளிகை பொருட்களை விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டு்ம் என வலியுறுத்தப்பட்ட நிலையில் தற்போது காலக்கெடு, எடை அளவு இல்லாத மளிகை பொருட்கள் ரேசன்கடைகளில் இருந்து அகற்றம்
*திருப்பூர் பகுதிகளிலுள்ள ரேசன் கடைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவு பொருட்ககளில், தயாரிப்பு, காலக்கெடு, எடை அளவு மற்றும் விலைப்பட்டியல் என ஏதுமின்றி விற்கப்படுவது தொடர்பாக சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் ஆட்சியரிடம் நேரிடையாக புகார் அளித்திருந்த நிலையில் தற்போது திருப்பூர் பகுதிகளிலுள்ள போயம்பாளையம் சக்திநகர், பழனிசாமிநகர், வீரபாண்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலுள்ள ரேசன்கடைகளில் தற்போது உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேரடியாக கள ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் பகுதிகளிலுள்ள அனைத்து ரேசன்கடை விற்பனையாளர்களுக்கும் மேற்கண்ட மளிகை பொருட்களை விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டு்ம் என வலியுறுத்தப்பட்ட நிலையில் தற்போது அனைத்து ரேசன் கடைகளில் உள்ள பொட்டுகடலை உள்ளிட்ட பாக்கெட் உணவு பொருட்ககளில், தயாரிப்பு, காலக்கெடு, எடை அளவு மற்றும் விலைப்பட்டியல் என ஏதுமின்றி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள பொருட்களை மாவட்ட கூட்டுறவு துறையினர் முற்றிலுமாக தற்போது அகற்றி வருகின்றனர்.