சுற்றுலா

கூட்டத்தில பயணம் போறீங்களா? இது உங்களுக்குதா..

கூட்டத்தில பயணம் போறீங்களா?  இது உங்களுக்குதா.. பொதுவாக, இரவு நேரம் பயணங்களை தவிர்த்திடுங்க. அப்படியே கூட்டத்தில போறீங்கனா? இதெல்லாம் பார்த்து வச்சுக்கர நால, நீங்க பாதுகாப்பாக இருக்கலாம்.

வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்புடன் இருக்க

பொது துறை போக்குவரத்தாக இருந்தாலோ, பேருந்தில் கூட்டம் இல்லாமல் இருந்தாலோ டிரைவர், கண்டெக்டர் அருகில் இருக்கும் சீட்டில் உட்காருங்க.

ரயிலில் செல்வதாக இருந்தால், ரிசர்வ் செய்யாமல் திடீரென புறப்படும்போது, பயணிகள் அதிகம் உள்ள பெட்டியில் ஏறுங்க. அபாய சங்கிலி எங்குள்ளது என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்தி வச்சுக்கங்க. அவசர நேரத்தில் உதவியாக இருக்கும்.  நீங்கள் இறங்க வேண்டிய இடத்திற்கான நடைமேடை எந்த பக்கம் வரும் என்று கணித்து அந்த பக்கம்  வெளியேற கூடிய வழியின் அருகில் உள்ள இருக்கையில் அமருங்கள். 

வாடகை கார்கள் மற்றும் தனியார் வாகனங்களில் செல்லும் போது பாதுகாப்புடன் இருக்க

ஒரு வேளை  நீங்கள் காலம் தாழ்த்தி செல்ல நேரிட்டாலோ அல்லது பொது துறை போக்குவரத்து செல்ல விருப்பம் இல்லை என்றால், உங்கள் வீட்டிலோ, அருகில் உங்களுக்கு தெரிந்தவர்கள் இருந்தால் அவர்களிடம் தெரிவித்து அழைத்து செல்ல கூறுங்கள். வாகன உரிமம் பெற்ற வாடகை காரிலும் போகலாம்.

காரை முன்பதிவு செய்யும் போதே வாகன ஓட்டுனரின் பெயரை கேட்டு தெரிந்து வைத்து கொள்ளுங்கள். உங்களால் அழைக்கபட்ட கார் தான், உங்களை அழைத்து செல்ல வந்து இருக்கிறதா? என்பதை உறுதிபடுத்திகங்க.

அப்படி வாடகை காரில் செல்வதாக இருந்தால் காருக்கான வாகன உரிமம் உள்ளதா, அதற்கான அடையாள எண் தகடு பொறுத்தபட்டுள்ளதா, டிரைவர் உரிமம் அடையாள அட்டை அணிந்துள்ளாரா? என்பதை உறுதிபடுத்துங்க. 

உரிமம் இல்லாத வாகனமாக இருந்தால் அதில் செல்வதை தவிர்த்திடுங்க. சந்தேகம் ஏற்பட்டால், ஏதாவது ஒரு காரணத்தை  சொல்லி காருக்குள் செல்வதை தவிர்த்து விடுங்கள்.  காரை முன் பதிவு செய்து போவதாக இருந்தால், அந்த நிறுவனம் பெயர், போன் நம்பர் நண்பருக்கு தெரிய படுத்துங்க. முன் பதிவு செய்த வாகனம் வந்தாலும் நீங்கள் புக் செய்த வண்டிதானா என்பதை உறுதிபடுத்திக்கோங்க. 

தனியாக பயணம் செல்லும் போது  ஓட்டுனருக்கு பின்னால் உள்ள இருக்கையில் அமருங்க. சங்கடமாக உணர்ந்தால் நல்ல வெளிச்சம் உள்ள பகுதியில் வாகனத்தை செலுத்த சொல்லலாம்.  நீங்கள் போய்ச்சேர  வேண்டிய  இடம்  வந்தாலும், போய்  வரும் வரை வாகன ஓட்டுநரை காத்திருக்க சொல்லலாம்.

நீங்கள் சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்ததும் குடும்ப உறுப்பினர், நண்பர்களுக்கு அதை போனில் தெரிவித்து உறுதிபடுத்தி கொள்ளுங்க. இன்றைய கால கட்டத்தில் நாம் இதெல்லாம் உறுதிப்படுத்தி கொள்வது அவசியம். இன்றைய இளைஞர்களும், பெண்களும் தங்களின் பாதுகாப்பை உணர்ந்து பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

லாங் ட்ரிப் போறிங்ளா அப்ப இத படிசுட்டு போங்க!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *