அன்பும் உறவும்வாழ்க்கை முறை

இந்த பழக்கங்கள் உங்ககிட்ட இருந்தா? நீங்கதா டாப்பு..!!

இந்த காலத்தில் என்னதா நாகரிகம் இருந்தாலும், ஆண்கள் இதெல்லாம்  பாலோவ் பண்ணுங்க. பொண்ணுங்களுக்கு இதெல்லாம் பண்ற நாலா நீங்க டாப்பா தெரிவிங்க. உங்கள் மேல பெண்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். அதுல சந்தேகம் வேண்டாம். நீங்க நீங்களா இருங்க. நாங்க நாங்களா இருப்போம் னு இப்ப இருக்க பசங்க ரொம்ப தெளிவா இருந்தாலும், இதெல்லாம்  பொதுவான வாழ்க்கை முறை. அன்றாட வாழ்க்கைல பெண்களை பாதுகாப்பாக வழி நடத்தி செல்ல ஆண்கள் கவனமாக செயல்பட வேண்டும்.

பெண்கள்  பாதுகாப்பிற்காக ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

ரயில் அல்லது பஸ்சிலோ பயணம் செய்யும் போது ஒரு பெண்ணிற்கு அருகில் மிக நெருக்கமாக நீங்கள் அமர வேண்டாம். உங்களுக்கு தெரிந்த பெண் நபரோ, குடும்பத்தை சேர்ந்த பெண்கள் யாரேனும் தனியாக சென்றால் அவரை உங்கள் வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி செல்லுங்கள். அல்லது அவருடன் கூடவே நடந்து  சென்று அவர் வீட்டிற்குள் சென்று விட்டார் என்பதை உறுதிப்படுத்தி கொண்டு பின்னர் நீங்கள் செல்லலாம். 

பல ஆண்களுடன் நீங்களும் இருக்க நேரிடும் போது மற்ற நபர்கள் அங்கு இருக்கும் ஒரு பெண்ணை உற்று நோக்குவது, விசில் சபதம் எழும்புவது, இடிப்பது, கிண்டல் அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டால் அது எந்த அளவிற்கும் அந்த பெண்ணிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதை நீங்களும் புருஞ்சுக்கங்க. 

பேருந்து நிறுத்தத்தில் யாருமே இல்லாத  இடத்தில் ஒரு பெண்ணிடம் பேச நேர்ந்தால், நீங்கள்  அந்த பெண்ணிற்கு  தொல்லை கொடுக்க கூடியவர் அல்ல என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பேசுங்க.

ஒரு பெண் செல்லும் வழியிலேயே நீங்களும் போக நேர்ந்தால், அந்த பெண்ணிற்கு  பின்னால்  செல்வதை தவிருங்க. அப்படி நீங்க செல்ற நால அது அந்த பெண்ணிற்கு மனதிற்குல் கலக்கத்தை அளிக்கும். அதனால் சாலையை கடந்து எதிர்புறம் உள்ள சாலையில் செல்லுங்கள்.  இந்த செயலால் அந்த பெண்ணை நீங்கள் பின் தொடர வில்லை என்பதை  உறுதிப்படுத்தும்.

பெண்கள்  பாதுகாப்பிற்காக ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்த்தோம். இனி வரும் காலங்களில் பெண்கள் தங்களை எப்படி பாதுகாத்து கொள்ள வேண்டும். இது போன்ற பல பயனுள்ள தகவல்களை  உங்களுக்காக பதிவு செய்கிறேன். இனி வரும் பதிவில்  உங்களை யாரவது தாக்க பட்டால் நீங்கள் என்ன செய்விங்க என்பதை பற்றியும்,  தற்காப்பு பற்றியும் தொடர்ந்து படிங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *