சோடசக்கலை பின்பற்றுங்க..!!
சோடசக்கலையானது நம் வாழ்வின் பல நல்ல திருப்பங்களை தரக் கூடியது, ஏற்றங்களை தரக்கூடியது. இதனைக் குறித்து நாம் முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும். சோடசக்கலை நேரம் ஆனது வெறும் ஐந்து நொடி தான் இருக்கும்.
சோடக் கலை நேரத்தில் மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரின் அருள்பார்வை கிடைக்கும் நேரமே சோடேசக்கலை என அழைக்கப்படுகின்றது. இந்த நேரத்தில் நாம் ஆழ்மனதில் முழுமையாக நம்பி எது வேண்டி கேட்டாலும் அது கிடைக்கும்.
இந்த சோடசக்கலை நேரம் என்பது அம்மாவாசை மற்றும் பௌர்ணமி இவை இரண்டும் முடியும் தருவாயில் உருவாகும். இந்த சோடசக்கலை யைப் அம்மாவாசை நேரம் முடிவதற்கு முன்னும் அமாவாசை நேரம் முடிந்த பின்பு ஒரு மணி நேரம் கழித்து பிரதமையில் இந்த இரண்டு மணி நேரத்தில் ஏதாவது ஒரு ஐந்து நொடியில் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் அனுகிரகம் ஒன்றாக கிடைக்கப் பெறும் நேரம் ஆகும்.
இந்த நேரத்தில் இதுதான் சரியான நேரம் என நாம் கணிக்க முடியாது. ஆனால் இந்த இரண்டு மணி நேரத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் அந்த ஐந்து நொடிகள் நாம் பெறலாம். ஆக இந்த இரண்டு மணி நேரமும் நாம் மன ஓர் நிலையோடு அமர்ந்து நமது வேண்டுதலை முன் வைத்து வேண்டினால் நிச்சயம் கிடைக்கப் பெறலாம்.
இரண்டு மணி நேரமும் மனம் ஒருநிலை என்பது மிகவும் அவசியம். ஆனால் சாதாரணமாக நமக்கு எடுத்த உடன் அமர்ந்து வேண்டும் அளவிற்கு மனமானது ஒரு நிலையில் இருக்காது. அந்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் ஒரு கோரிக்கையை முன் வைத்து அதனை ஒரு மணி நேரம் ஒரு தாளில் எழுதி அது கிடைத்து விட்டதாக இறை அருளுக்கு நன்றி சொல்லி எழுதி ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் எழுதியதை படிக்க வேண்டும். அதன்பின் கண்ணை மூடி வேண்டுதலை முன் வைக்க வேண்டும். அப்பொழுது மனமானது ஒரு எண்ணத்தில் குடிகொண்டிருக்கும்.