சரியும் இந்திய பொருளாதாரம் ஐஎம்எப் கணிப்பு
2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதாரம் நான்கு சதவீதத்துக்கும் அதிகமாக குறையலாம் என்றும் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. 2020ஆம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார நிலையானது அதல பாதாளத்திற்கு செல்லும் என்றும் தகவல்கள் கிடைத்து வருகின்றது. கொரோனா வைரஸ் இந்த அளவிற்கு நம்மை தாக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஊரடங்கு ஆரம்ப காலகட்டத்தில் இருந்தாலும் மிடில் கிளாஸ் மக்களின் வாழ்வு என்னமோ திண்டாட்டமாக இருந்தது. அதுவும் லோயர் மிடில் கிளாஸ் மக்கள் மிகவும் திணறிப் போயினர் என்று சொல்லலாம். உலக நாடுகள் அனைத்தும் கொரோன வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதில் இந்தியாவும் ஒன்று இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சி 4.5% இருக்கும் என்றும் கணிப்பு கூறியுள்ளது என உலக பொருளாதார அமைப்பான ஐஎம்எப் கூறியுள்ளது. உலக அளவில் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சிகள் இருந்தாலும் இந்த முறை வீழ்ச்சி பெரும் சவாலாக இருக்கும் என்று நம்பப்படுகின்றது.
இந்தியாவின் உற்பத்திகள் அனைத்தும் குறைய வாய்ப்புள்ளது. உற்பத்தி குறைந்தால் தேவைகள் தட்டுப்பாடு ஏற்படும். விலை பெருகும். வாங்கும் திறன் குறையும். பெரிய அளவில் சிக்கலை இந்தியா சந்திக்க நேரிடும். இந்தியா இது குறித்து தீவிர ஆலோசனையில் உள்ளது. நிச்சயம் எல்லாவற்றையும் சரி செய்யலாம் என்ற நம்பிக்கையுடன் அரசு முயற்சிக்கின்றது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பல்வேறு உற்பத்திகள் பாதிப்பு ஏற்றுமதிகள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. நாட்டில் விவசாயம் இன்னும் என்ன ஆகுமோ என்ற பீதியில் இருக்கின்றோம்.
பயிற்சி செய்ய விவசாயிகள் பிழைத்திருக்க வேண்டும் ஆனால் இங்கு கொரோனா கோரத்தாண்டவம் ஆடுகின்றது. இயல்புநிலைக்கு திரும்பலாம் என்றால் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
வேலைவாய்ப்புகள் பலர் இழந்துள்ளனர். கிரெடிட் கார்டுகள், இஎம்எஸ் எல்லாம் தலைக்கு மேல் எகிரும் அடுத்து வேலைவாய்ப்பு கிடைத்து நிலுவைத் தொகையை கட்ட வேண்டும். இறுதி ஆண்டு மாணவர்கள் பணிக்கு சேருவது எப்படி என்னடா இது காலக் கொடுமையா இருக்குது என மக்கள் புலம்புகின்றனர்.