தமிழகத்தில் மழை காரணமாக ரெட் அலர்ட்
தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை மற்றும் தேனி போன்ற மாவட்டங்களில் கனமழை செய்துவருகின்றது. இதன் காரணமாக இந்த பகுதிகளில் மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு இடைவிடாமல் பெய்து வருகின்ற மழையை நீலகிரி மாவட்டம் வெள்ளத்தில் மிதக்கின்றது. நீலகிரியில் பெய்த மழை 36 சென்டிமீட்டர் மழை பெய்தது குறிப்பிடத்தக்கதாகும். வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிவிக்கையின்படி தென்மேற்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில் உள்ளது. இதன் காரணமாக மழையின் வேகம் அதிகரிக்கும் கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்கள் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. நீங்கள் காற்று 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், வேலூர் மாவட்டங்களில் கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் தகவல்கள் கிடைக்கின்றன. ஆகஸ்ட் 11 வரை மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றுவானிலை மையங்கள் அறிவித்துள்ளன