சுவாசம் குறித்த அறிந்து கொள்ள வேண்டிய குறிப்புகள்!
சுவாசம் சாதரணமாகத் தானாகவே நடைபெறுகிறது. காற்று வெளியிலிருந்து அல்லது வாய் ஊடாக தொண்டையை அடைந்து குரல்வளை ஊடாக வாதானி சென்றடைகிறது. வாதானி இரண்டாகப் பிரிந்து இடது, வலது ஆகிய சுவாசப்பைகளுக்குக் காற்றைக் கடத்துகிறது.
காற்று வெளியிலிருந்து சுவாசப்பை அடையும் வழியை சுவாசப் பாதை என்பர் சுவாசப் பாதையில் தடையில்லாவிடில் காற்று இலேசாக சுவாசப்பையை அடையலாம்.
செயற்கை சுவாசம் விலா எலும்புகளுக்கிடையிலான தசைகளும், பிரிந்து செயற்படுவதின் போது நெஞ்சறை விசாலமடைகின்றது. இதனால் உள் அழுக்கம் குறைந்ததும் காற்று சுவாசப் பாதையிலூனாடாக உட்புகுகின்றது. சுவாசம் நிகழ்வதற்கு சுவாசப் பாதையில் தடைலில்லாமலிருப்பது அவசியம்.
இந்நிகழ்ச்சியின் போது நெஞ்சறை விரிவடைகின்றது. தட்டையாகக் கீழிறங்கியிருப்பதைக் கவனித்து பார்த்தால் தெரியும்.
இது நெஞ்சறை பழைய நிலைக்குத் திரும்பும்போது ஏற்படுகிறது. பிரிமெந்தகடு எவ்வாறு தளர்ச்சியடைந்து மேல் நோக்கியிருக்கும்.
ஆரோக்கியமான வயதடைந்தவர்கள் ஒரு நிமிட நேரத்தில் 16- 20 தடவைகள் சுவாசிப்பர். பிள்ளைகளின் சுவாச வீதம் இதனை விட கூடுதலானது.
சுவாச அசைவுகள் மூளைலிலுள்ள சுவாச மையத்தால் கட்டுப்படுத்தபடுகிறது.
வளியில் ஆக்ஸிஜன் உண்டு, ஆகிஸிஜன் இல்லாமல் மனிதன் உயிர்வாழ முடியாது.
ஒரு மனிதன் 3 நிமிடங்கள் சுவாசமின்றி இருந்தால் அவனுடைய மூளை தேசமடைந்து விடும். எவ்வளவுக்கு எவ்வளவு கூடிய நேரம் சுவாசமின்றி இருக்கின்றாறே, அவ்வளவுக்கவ்வளவு சரிவில் இருந்து மீட்கப்படும் வாய்ப்புக் குறைந்து கொண்டே செல்லும்.
செயற்கைச் சுவாசம்:
இது முதலுதவியாளரின் சுவாசப்பைகளில் இருந்து விபத்துக்குள்ளான சுவாசப்பைகளுக்கு காற்றைக் கொடுக்கும் முறையாகும். முதலுதவியாளர் தன்வெளி சுவாசபைகளுக்குச் செலுத்துவார்.
முதலுதவியாளரின் வெளிச்சுவாசத்தில் போதியளவு ஆக்ஸிசன் இருப்பாதலே இம்முறையைக் கையாளக்கூடியதாகவிருக்கிறது. செயற்க்கைச் சுவாசம் தேவைப்படின் அது உடனடியாக அளிக்கப்பட வேண்டும்.
சுவாசப் பாதையின் தடைகளகற்றவது செயற்கைச் சுவாசம் அளிப்பதும்: அறிவிழந்த நிலையில் தசைகள் தளர்வடைதனாலும் நோயாளி மேல் நோக்கிக் கிடைப்பதனாலும் நாக்கு தொண்டைக்குள் வீழ்ந்து காற்று பாதையை அடைத்து விடுகிறது.
மேற்கூறிய நிகழ்வதினாலேயே அறிவிழந்த நிலையிலூள்ல அநேகரில் மரணம் ஏற்படுகிறது காற்று பாதையில் தடைகள், ஏற்படாவண்ணம் முதலில் செயற்படுவதே முக்கியமாகும்.
தடைப்பட்ட காற்றுப் பாதை:
கீழ்த்தாடை தள்ர்வடைதனால் இதுவும் இதனுடன் பொருந்திய நாக்கு பின்னோக்கி விழுவதனால், தொண்டையிலுள்ள காற்றுப் பாதை தடைப்படுகின்றது. காற்று சுவாசப்பையை அடைய முடியாது.
தடையற்ற காற்றுப் பாதை:
தலையை பின்னோக்கித் தள்ளுவதனாலும் தொண்டை தசை நார்கள் இழுபடுவதனாலும் நாக்கினாலேற்பட்ட தடையகற்றப்படுகின்றது.