சினிமா

எஃப். ஐ. ஆர். படத்தில் விஷ்ணு விஷால் யார்?

விஷ்ணு விஷால் மஞ்சிமா மோகன் இணையும் படம் எஃப். ஐ. ஆர். இவர்களுடன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் திகில் படமாக இயக்குனர் மனு ஆனந்த் அவர்களால் இயக்கப்படுகிறது. இந்த படத்தில் இவர் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் தயாரித்தும் உள்ளார்.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான டீசர் ஜனவரி 2020 வெளியானது. கௌதம் வாசுதேவ் மேனன் காவல் அதிகாரியாக தேடபடும் தீவிரவாதியின் பெயரை கூற அது நம் கதாநாயகராக என்ற கேள்வி எழுகிறது. தீவிரவாதம் பயங்கரவாதம் பற்றிய திகில் படமாக இருக்கிறது. டீஸர் காணொளி கேள்விக்குறியாக முடிந்தது.

நேற்று விஷ்ணு விஷாலின் பிறந்த நாளை ஒட்டி இவரின் தயாரிப்பு நிறுவனமான வி. வி. ஸ்டூடியோஸ் பிறந்தநாள் வாழ்த்தை படத்தின் காணொளி மூலமாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். டீசரின் எழுப்பப்பட்ட தீவிரவாதி இவரால் என்ற கேள்வி இந்த காணொளியில் பதில் கிடைத்துள்ளது.

தீவிரவாதியின் பெயர் அபூ பக்கர் அப்துல்லா இவரின் பெயர் இர்ஃபான் அஹமத் ஆகையால் அவர் இவர் இல்லை என்பது நிரூபணமாகிறது.‌ விஷ்ணு விஷாலின் கதாபாத்திரம் கெமிக்கல் பொறியியல் முடித்த பட்டதாரியாகஇருக்க இந்த போலீஸ் வழக்கில் மாட்டிக்கொள்வது போலும் இருக்கிறது. ஆனால் பெயர் மாற்றப்பட்டு இருந்தால் நமக்குத் தெரியாது படம் வெளியான பிறகே முழு விவரங்கள் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *