மாரடைப்பு கால முதலுதவி!
தங்கங்களே தங்ககைகளே தம்பிமார்களே முதலுதவி படிங்க பயிற்சி செய்யுங்க,, மனிதனை மனிதன் காக்க வேண்டும். இதுவே மனித தர்மம். இதையே அறிந்து கொண்டு அனைவருக்கும் உதவனும் தங்கங்களே வாங்க தெரிஞ்சுகோங்க.
பள்ளி, கல்லுரி, தொழில் அமைப்புகள், பயிற்சி வகுப்புகள் அனைத்திலும் முதலுதவி குறித்து தெரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ள வேண்டும். ஆசிரியர்கள், அரசாங்கம், அமைப்புகள் போன்றவை இது குறித்து தீவீரமாக ஆலோசித்து செயல்பட வேண்டும்.
வாகனங்களில் அளவான வேகத்தில் செல்லவும், வேகத்தடையில் கவனம் வைத்து செல்லவும். தேவைப்படும் கவசங்களையும் கவனத்தையும் உடன் வைத்துச் செல்ல வேண்டும். அரசின் கவன ஈர்ப்பு விளம்பரங்கள் சட்டங்கள் அனைத்தும் உங்களை காக்கவே என்பதை சிந்தித்து செயல்படுங்கள்.
என்ன செய்ய வேண்டும்
விபத்து அல்லது உடலில் ஏற்படும் மாற்றங்கள் அசாதரண சூழலை உண்டு செய்யும் பொழுது மருத்துவர் இல்லாத இடத்தில் மருத்துவ மணைக்குச் செல்லும் முன்பு என்ன செய்ய வேண்டும் என தெரிந்திருப்பது அவசியம் ஆகும்.
மாரடைப்பு ஏற்படும் பொழுது என்னென்ன உதவிகள் செய்ய வேண்டும் என்பதை விளக்குகின்றோம். பாருங்க படியுங்க, பயிற்சி செய்யுங்க நிச்சயம் உதவிகரமானதாக இருக்கும் நம்புங்க.
செயற்கை சுவாசம்
நோயாளிகளின் இறுக்கமான உடைகளை தளர்த்தி அவரை படுக்க வைத்திருக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர் இருந்தால் நோயாளிக்கு கட்டாயம் செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். நைட்ரோக்ளிசிரைன் அல்லது ஸார்பிட்ரேட் மாத்திரைகள் ஒன்றிரண்டு மாத்திரைகள் நோயாளியின் நாக்கில் அடியில் வைக்க வேண்டும். நீரில் கரைக்கப்பட்ட நிலையில் அஸ்பிரின் மாத்திரையைக் கொடுக்கலாம் மேலே கொடுக்கப்பட்ட குறிப்புகளின் படி சிறந்த மருத்துவரின் சிகிச்சைக்கு நோயாளியை உட்படுத்துதல் வேண்டும். மாரடைப்பிற்கு உரிய முறையில் சிகிச்சை அளித்தால் உயிரிழப்பை தடுக்கலாம்.
வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி:
காயத்தை சுத்தமாக கழுவ வேண்டும். வெளியேறும் ரத்தத்தை அழுத்தம் கொடுத்து நிறுத்த வேண்டும். சுத்தமான பேண்டேஜ் துணியால் காயத்தை சுற்றிக் கட்ட வேண்டும். ஆழமான காயத்திற்கு உடனடியாக மருத்து வரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
சிராய்ப்பு மற்றும் சிறுகாயங்கள்:
இளஞ்சூடான நீரில் எலுமிச்சை மற்றும் மஞ்சள் கலந்து காயத்தினை நன்கு கழுவ வேண்டும். இரத்தம் கசிந்தால் துணியினால் காயத்தை கட்ட வேண்டும்.