ஆன்மிகம்

திருச்செந்தூர் முருகன் கோவிலின் பிரம்மிக்கும் கட்டிடக்கலை!

தமிழகத்தின்  தென் கடைக்கோடியில் உள்ள அசுரரையும், சுனாமியையும் வென்ற திருச்செந்தூர் முருகன் கோயில் ஒரு கட்டிடக் கலை அதிசயம. முருக பெருமான்  சன்னதி சென்றுவர கோடி புண்ணியம் பெறலாம். 

கடற்கரையை ஒட்டி பெரிய கட்டிடங்கள் கட்டும் பொழுது பயம் நிச்சயம்  இருக்கும் அதுபோன்று கட்டிடங்கள் எப்படி நிலைக்கும் என பயமும் இருக்கும். ஆனாலும் இது சிறப்பு வாய்ந்த கட்டிடம். நாம் சென்று அதிசயித்து பார்க்க வேண்டிய கட்டிடம் அது நம்ம திருச்செந்தூர் முருகன் கோவில்தான். 

கடற்கரைப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் தரைக்கு மிக அருகில் இருக்குமாதலால் இங்கு கட்டப் படும் கட்டிடங்கள் விரைவில் பலவீனமாகி விடும்.எப்படிதான் கட்டிடங்கள் கட்டினாலும் தரை மட்டத்திலிருந்தும் கடல் மட்டத்திலிருந்து உயரமான மேடைகளை அமைத்து அதன் மேல்தான் கட்டுவார்கள்.  ஆனால்,இதில் என்ன அதிசயம் என்றால் நமது திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீ தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம், கடற்கரையிலிருந்து 140மீ தொலைவில்தான் அமைந்துள்ளது. இது வியப்பின் உச்சிக்கே நம்மை இழுத்துச் செல்லும்.

திருச்செந்தூர் முருகன் கோவிலில் சென்று வழிபட்டால் நாம் பட்ட கஷ்டங்கள் எல்லாம் தீரும். உடல் நலம் பெறும்.  கடலில் குளித்து வழிபடுதல் இன்னும் சிறப்பாகும்.

மாபெரும் ஆண்மிக  சிறப்பு கொண்ட கோவிலின் கட்டிடக்கலை என்னே! என நம்மை எல்லாம் பிரம்மிப்பில் ஆட்டும். எல்லாவற்றையும் விட பெரிய வியப்பு இந்த கோயிலின் கருவறை. இது தரை மட்டத்திலிருந்து 15 அடியும், கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது !.

திருச்செந்தூர் விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் வைத்துப் பார்த்தால், இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம்.

ஆபத்து மிக்க  இடத்தில், கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்பதை பார்க்கும்போது நமது முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவும் திறமையும், கடவுள் மேல் அவர்களுக்கிருந்த நம்பிக்கையும் நம்மை வியப்பில் ஆழ்த்துக்கின்றது. இதையெல்லாம் வைத்துதான் அனுஉலைகள்  கொண்ட கட்டிடங்கள் கட்டினார்களோ என்று சந்தேகிக்கின்றது. நாம் அறியாத அனைத்து உண்மைகளும் அயல்நாட்டினர் அறிந்து செல்கின்றனர் என்பது நமது இயலாமையைப் பரைசாற்றுக்கின்றது.

இறைப்பணியில்   ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் கோவிலில் அப்படி என்ன சிறப்பு என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதுகுறித்த அடுத்தடுத்த பதிவில் காண்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *