பாராளுமன்றத்தில் நிதி அறிக்கை சிறப்புகள்!
பாராளு மன்றத்தில் நடப்பு ஆண்டிற்கான நிதியாண்டில் அரசு நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதலாக 2.35 லட்சம் கோடி ரூபாய் துணை மானிய கோரிக்கை தாக்கல் செய்திருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் நிதி அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்.
நிதி மானிய கோரிக்கை :
துணை மானிய கோரிக்கையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே சுமார் 1.66 லட்சம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஊதிய உயர்வினை ரூபாய் 40,000 கோடி செலவு கொண்டு எதிர் கொண்டிருக்கின்றது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் ரூபாய் 20 ஆயிரம் கோடி ரூபாய் பங்கு மூலதனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதிமானியம்:
ஜன்தன் யோஜனா மூலம் 33 ஆயிரத்து 771 கோடி நேரடி மானியம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. சுமார் 30 ஆயிரத்து 957 கோடி ரூபாய் ஜன்தன் யோஜனா மூலம் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது.மேலும் வயது முதிர்ந்த பெரியவர்களுக்காக ரூபாய் 2 ஆயிரத்து 2814 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்கி இருக்கின்றது.
தேசிய உணவு பாதுகாப்புத்திட்டம், முத்ரா:
தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு ரூபாய் பத்தாயிரம் கோடி மானியம் முத்ரா திட்டம்மூலம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மத்திய அரசு மேலும் கடன் கொடுப்பதற்கு வரிச்சலுகையை 2 சதவீதமாக உயர்த்தி இருக்கின்றது இத்துடன் சிறு குறு நடுத்தர தொழில்களுக்குக் கடன் தொகையை 4000 கோடியாக வழங்குவதற்கு தொகையானது ஒதுக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த அறிவிப்பினால் மாநிலத்தில் நிதி பற்றாக்குறை போக்கவும் தனி தொகையை வழங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.