அடேங்கப்பா அடுத்த சரவெடி இன்று மாலை 4 மணி நிதி அமைச்சர் வர்ரார்
அடேங்கப்பா இதான் இந்த 20 லட்சம் கோடி திட்டமா மாலையில் நிதி அமைச்சரை மறக்காமல் பாருங்க. டெல்லியில் புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளார். இதில் இந்தியாவில் வாங்கவும் தற்சார்பு பொருளாதாரப் போக்கும் இருக்கும்.
உலகை ஆளும் இந்தியா என்று போட்டாரே ஒரு பொடி சொக்கு பொடி, மக்கள் எல்லாம் உற்சாகம் அடைந்தனர். சிறப்பு மிக்க அவரது உரையில் இந்த முறை நாட்டின் பொருளாதாரம் குறித்து பெரும் கவலை ரேகை தெரிந்தது.
பொருளதாரத் திட்டம்:
அதன் வேகம்தான் ஏப்பா இந்தாங்க 20 லட்சம் கோடி திட்டம் என்று ஒரு பொருளாதார புரட்சியை கொடுப்பது போல் நீண்ட நெடிய திட்டம் ஒன்றை ஹிண்ட்ஸாக எடுத்து நம்மை உற்ச்சாகப் படுத்தி சென்றார். வெறி கொண்ட வேங்கையாக மோடி உரை இல்லை ஆனால் உலகை வழி நடத்தும் இந்தியா என்று பதுங்கி ஒரு போடு போட்டுச் சென்றார். இது சிறப்பிலும் சிறப்பாகும். இந்தியாவை இதுபோன்று அப்துல்கலாம் அவர்களுக்கு பிறகு கடந்த 25 ஆண்டுகளில் பெருமை படுத்திய பெருமை மோடியை சேரும் என்பதில் மாற்றுக்கடுத்து இல்லை.
வல்லுநர்கள் முனுமுனுப்பு:
கட்சி சாரா தேச நலன் போற்றும் வல்லுநர்கள் அனைவரும் இந்தக் கருத்தை முனுமுனுத்தவாரே இருந்தனர், எது எப்படியோ இந்தியாவும் உலகை வழிநடத்தும் என்ற வாசகம் எல்லார் மனதையும் ஒரு உலுக்கு உலுக்குவிட்டது.
கொரோனா வைரஸினால் ஏற்பட்ட இழப்பை போக்க முடங்கியுள்ள பொருளாதாரத்தை போசாக்காக மாற்ற, 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் ஒன்றை இந்திய நிதி அமைச்சர் அறிவிக்கவுள்ளார், பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் இரவு நாட்டு மக்களிடையே ஆற்றிய உரையின் போது தெரிவித்தார். நேற்று நிதி அமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதுபோல் நம் கேபினட் நிதி அமைச்சர் இன்று மாலை 4 மணிக்கு டெல்லியில் பத்திரிக்கை நிருபர்களை சந்திக்கவுள்ளார்.
எதையும் அடிச்சு நொருக்கும் விதமாக பேசும் நிதி அமைச்சர் என்ன சொல்லப் போகின்றார். மக்களுக்கு அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மக்களுடன் இணைந்து சிலேட்குச்சியும் காத்திருக்கின்றது. விவசாயிகள், தொழில்துறைகள் குறித்து அறிவிப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.