ஆன்மிகம்ஆலோசனை

முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி ஏன் கொடுக்கப்படுகிறது

ஒருவர் இறந்தால் அவரை நினைத்து ஒவ்வொரு ஆண்டும் அவர் இறந்த அதே திதியில் நாம் வீட்டில் அல்லது கோவிலில் சென்று செய்யும் வழிபாடு சிராத்தம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த நாளின் போது வரும் திதியில் செய்வது சிராத்தம் என்று கூறலாம். ஒவ்வொரு அமாவாசை அன்றும் முன்னோர்களை நினைத்து எள்ளும், தண்ணீரும் இறைத்து செய்யும் வழிபாடு தற்பணம் என்று கூறப்படுகிறது.

தர்ப்பணம் செய்த பின் வீட்டில் இலை போட்டு முன்னோர்களுக்கு படைத்துவிட்டு சாப்பிடுவது, பசுமாட்டுக்கு அகத்திக்கீரை அல்லது அரிசி கலந்த உணவை அளிப்பது போன்றவையும் இதில் அடங்கும் தர்பணம் செய்யவும். முன்னோர்களை வழிபடக்கூடிய மிகச் சிறந்த நாளாக புரட்டாசி அமாவாசை மஹாளய பட்சம் 16 நாட்களும் உகந்தவை.

புரட்டாசி மாதம் தேய்பிறை பிரதமை தொடங்கி 15 நாட்களை நாம் முன்னோர்களை வரவேற்கும் மஹாளய பட்சம் கடைபிடிக்கப் படுகின்றது. இந்த காலத்தில் நம் முன்னோர்கள் நம்மை காண பூலோகம் வருவதாக ஐதீகம். இந்நாட்களில் ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை, தனுஷ்கோடி, கன்னியாகுமரி, காவிரியாறு உள்ளிட்ட புனித இடங்களில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் வாழையடி வாழையாக வம்சம் தழைத்தோங்கும்.

நம் முன்வினைப் பாவங்கள் நீங்கி பித்ருக்களின் ஆசியால் வளமும், மன நிம்மதியும் கிடைக்கும். இந்த முன்னோர்கள் வழிபாட்டை ஒவ்வொரு வருடமும் தவறாது அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், அன்பு செலுத்தும் விதத்திலும் வழிபட்டு வர வேண்டும். ஒரு வருடம் கும்பிட்டு மற்ற வருடமும் கும்பிடாமல் விடக்கூடாது.

நாம் ஒவ்வொரு வருடங்களிலும் வருகின்ற விழாக்களை கொண்டாடுவது போல, முன்னோர்களையும் அவர்களுக்குரிய திதி நாட்களிலோ, முக்கியமான அமாவாசை தினங்களிலும், ஒவ்வொரு மாதப் பிறப்பிலும், வருடப்பிறப்பிலும், அவர்களை வழிபட்டு காகத்திற்கு அன்னம் வைத்து வழிபடலாம்.

மஹாளய பட்சம் என்பது 15 நாட்கள் கால அளவைக் குறிப்பது. மஹாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு பிறகு 15 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு மஹாளய பட்சத்தின் இறுதி நாளாக மிக முக்கிய நாளாக பார்க்கப்படும் மஹாளய அமாவாசை புரட்டாசி அமாவாசை அன்று வழிபட்டு முடிக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *