Festival special Paayasam: வரப்போகும் தீபாவளி ஆயுத பூஜைக்கு சாமிக்கு படைக்கும் அசத்தல் பாயாசம் இந்த மாதிரி செஞ்சு பாருங்க
தீபாவாளியும் ஆயுத பூஜையும் பக்கத்துல வர போது ஆனா இப்ப வரைக்கும் என்ன ஸ்வீட் செய்யலாம் சாமிக்கு என்னென்ன நெய்வேத்தியம் படைக்கலாம் அப்படின்னு யோசிச்சுட்டு இருக்கீங்களா. இனி கவலையே வேண்டாம் வீட்டிலேயே மிக அருமையான மிக மிக சுவையான ஒரு ஸ்வீட் எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க. இத நீங்க சாமிக்கு நெய்வேத்தியமாக படைக்கலாம் மேலும் உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் இதனை விரும்பி சாப்பிடுவர்.
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு – 1 கப்
ஜவ்வரிசி – 1/4 கப்
வெல்லம் – 2 கப்
தேங்காய் பால் – 1 கப்
நெய் – 4 ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
சுக்கு பொடி – 1/2 டீஸ்பூன்
திராட்சை , முந்திரி – தேவைக்கு ஏற்ப
அசத்தலான பாயாசம் செய்முறை
ஒரு குக்கரில் கடலை பருப்பை போட்டு இரண்டு விசில் விட்டு எடுத்து நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். நாம் எடுத்து வைத்த ஜவ்வரிசியை வேறொரு பாத்திரத்தில் போட்டு வேகவைத்து கொள்ளவும். பின்பு இன்னொரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து சிறிது தண்ணீர் கலந்து அடுப்பில் சிறிது நேரம் வைக்க வெல்லம் நன்கு கரைந்து விடும். பின்பு அடிப்பகுதி சற்று கனமாக உள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து நாம் மருத்துவ வைத்த கடலைப்பருப்பு மற்றும் கரைத்து வைத்த வெல்லக்கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும். சிறிது நேரம் கொதித்த பின்பு அதில் வேகவைத்த ஜவ்வரிசி, ஏலக்காய் தூள், சுக்கு பொடி ஆகியவற்றை சேர்க்கவும். பின்பு நெய்யில் வறுத்து எடுத்த முந்திரி ,திராட்சை,தேங்காய் துண்டுகள் ஆகியவற்றை சேர்க்கவும். அனைத்தும் நன்றாக கொதித்த பின்பு கடைசியாக அதில் நாம் எடுத்து வைத்த தேங்காய் பாலை சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் விட்டு இறக்கி விடவும்.
அவ்வளவுதான் நம்முடைய சுவையான பாயாசம் ரெடி.. பண்டிகை நாட்களில் இதனை செய்யும் பொழுது உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக சாப்பிடுவர் மற்றும் தெய்வத்திற்கு படைக்கும் தெய்வீக நெய்வேத்தியமாகவும் இருக்கும் எனவே இந்த வருடம் உங்கள் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை அசத்தலான பாயாசத்துடன் கொண்டாடி மகிழுங்கள்.