பண்டிகை காலப் பட்ஜெட் போட்டாச்சா மக்களே!
பண்டிகை காலம் தொடங்கி விட்டது. நவராத்திரி அடுத்து தீபாவளி நெருங்குகின்றது. பண்டிகைகால பட்ஜெட் தயார் செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகைக்குத் தினுசு தினுசா வாங்குவது வழக்கமாக இருக்கும். நடப்பு ஆண்டில் நல்லா திட்டமிடுவோம் வாங்க.
- பண்டிகைகாலம் வந்தாச்சு, பலமான கொண்டாட்ட துவங்கள் குறித்து ஆலோசிக்கத் தொடங்கிவிட்டோம்.
- பண்டிகைக் காலங்களில் மக்கள் சந்தைகளில் புதிது புதிதுதாக என்ன வாங்கலாம் என்ற திட்டமடலை செய்யலாம் வாங்க மக்களே,
- பண்டிக்கைக்கு புதுத்துணிகள், பட்டாசுகள், பலகாரங்கள், புதிய கேஜெட்டுகள் மற்றும் அணிகலன் ஆபரணங்கள் அடுத்து பர்னிச்சர்கள் கிச்சன் கலெக்சன்கள், புதிய வண்டி என வயதுகளுக்கு ஏற்ப விருப்பங்கள் மாறுபடும் வாங்க அவற்றை பாப்போம்
பண்டிக்கால கொண்டாட்டம்
ஒன்பது நாட்கள் நவராத்திரி பூஜைகள் மிகச்சிறப்பாக மக்களே செய்து கொண்டாட்டம் முடித்திருக்கின்றோம். அடுத்து நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி வருகின்றது. தீபாவளி என்றாலே நமக்கு தில்லான கெத்தான் ஸ்டைலான பல நினைவுகள் நம்மை கட்டிப் போடும்.
தீபாவளி ஸ்பெசல் டிப்ஸ்
தீபாவளி என்றால் ஒரு மாதம் முன்பிருந்தே பலகாரங்கள், புத்தாடைகள், பட்டாசுகள் வாங்குதல் வீட்டிற்கு புதிதாகப் பர்னிச்சர்கள் வாங்க பல்வேறு திட்டங்களை தீட்டுவோம்.
பட்ஜெட்டில் மாற்றம்
நடப்பு ஆண்டில் நமக்கெல்லாம் பட்ஜெட்டில் பலருக்கு மாற்றம் இருக்கும். நட்ப்பு ஆண்டு நோய்காலமாக நாடே முடங்கி கிடந்தது. ஆகையால் மக்கள் மெல்ல இப்பொழுதுதான் எழுந்துள்ளனர்.
எல்லோருக்கும் ஏற்றப் பட்ஜெட்டில் சிலேட்குச்சி தொடர்ந்து டிப்ஸை அள்ளி தெளிக்கவுள்ளது. அடித்துக் கொள்ளாலமல் அலட்டல் இல்லாமல் தீபவளியை தித்திப்புடன் கொண்டாடுவோம்.
காசுப் பணம் துட்டு மணி மணி
தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு காசு பணம் துட்டு மணி மணி வேணும் சிலேட்டுகுச்சி நீ கம்முனு கெடன்னு சொல்ரது கேக்குது ஆனால் நம்ம பட்ஜெட்க்கு ஏற்றார்ப் போல் நாம் கொண்டாடலாம் வாங்க.
வருடத்திற்கு ஒருமுறை இப்படி கொண்டாடலாம்
வருடத்திற்கு ஒரு முறை வரும் பண்டிகையில் நாம் வருடம் முழுவதும் பட்ட கஷ்டத்தை காட்டி வழி அனுப்பாதீர்கள். தீபாவளி திருப்பமாக அமையும் என்று நம்பி கொண்டாட்டத்தை தொடங்குவோம் வாங்க.
கோலகளமாக நம்ம பட்ஜெட்டில் பண்டிகை
கொரோனா காரணமாகப் பல்வேறு பணிகள் முடக்கம் ஆகியிருக்கின்றன. தற்போது தான் பழைய நிலைமைக்கு நாடு திரும்பி கொண்டிருக்கின்றது. இந்தமுறை கோலாகளமான கொண்டாட்டம் தீபாவளிக்கு இருக்குமா என்ற கேள்வியும் இருக்கின்றது.
பண்டிகை செலவு
அதே நேரத்தில் தீபாவளியை புறக்கணிக்கவும் முடியாது தீபாவளி நாளில் ஒரு சிறு கைக்குட்டையாவது வாங்கி பயன்படுத்த வேண்டும் என, நம் முன்னோர்கள் காலங்காலமாக நமக்குக் கூறிக்கொண்டு வருகின்றனர்.
தீபாவளிக்கு என்று பண்டிகைக்கால செலவு பட்ஜெட் போட ஆரம்பித்து விட்டீர்களா அதுகுறித்து அடிப்படை குறிப்புகளை சிலேட்டு குச்சி தொடர்ந்து வழங்க உள்ளது.
இது உங்களுக்கு ஒருசில செலவு உத்திகளை கையாள உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம். இதனை முழுமையாகப் படித்து உங்களுக்கு ஏதேனும் ஐடியாக்கள் இருக்கும் அதனை கமெண்ட் பாக்சில் கொடுக்கலாம்.
சந்தைகளில் நிரம்பி வழிகின்றது
இதன் மூலம் தீபாவளி பட்ஜெட்டுக்கு மக்கள் தயாராவதற்கு வாய்ப்பாக இருக்கும். சந்தைகளில் தீபாவளிக்கு பண்டிகை காலங்களில் செய்வதற்கு பல்வேறுவிதமான புதிய பொருட்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.
கைகொடுக்கும் திட்டமிட்டு பட்ஜெட்
நம்மிடம் இருக்கும் குறைந்த அளவு பணத்தை வைத்து எதை வாங்குவது எதை விடுவது என்கின்ற குழப்பங்கள் அதிகரித்து காணப்படுகின்றது. இதற்கு இப்பொழுது இருந்து நேரத்தை செலவிட்டு பட்ஜெட் போட்டு எழுதி வைத்துக்கொள்ளுங்கள் அல்லது உங்கள் நோட் பாடல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.
பண்டிகைகால மகிழ்ச்சி
செலவுகளை கட்டுக்குள் வைத்துக்கொண்டு நிம்மதியாகத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடலாம். குடும்பத்துடன் குதூகலமாக வாழலாம். உங்களது பண்டிகை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாட சிலேட்டுகுச்சி கொடுக்கும் அடிப்படை குறிப்புகளை பயன்படுத்தி தீபாவளியை திருப்பம் தரும் நாளாக மாற்றிக் கொள்ளலாம்.