ஆன்மீகத்தில் வெற்றிலையின் பயன்கள்
அறுசுவை உணவுக்கு பின் உண்ணும் ஒரு பாரம்பரிய வழக்கமாக உள்ள வெற்றிலை ஆன்மீகத்தில் மிகப்பெரும் சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்குகிறது என்பதை நாம் அறிந்திருப்பதில்லை. ஆம் வெற்றிலையின் ஆன்மீக தன்மையை விளக்குவதற்கு வார்த்தைகளே இல்லை. அத்தனை நன்மைகள் உள்ளது நாம் அனைவரும் ஒரு அறுசுவை விருந்து உண்ட பின் வெற்றிலை போட்டால் வாய் புத்துணர்ச்சி ஏற்படும் மேலும் அஜீரணக் கோளாறு எதுவும் ஏற்படாமல் உடலை பாதுகாக்கும் என்று மட்டுமே நம்பி வெற்றிலையை சாப்பிட்டு வருகிறோம்.
மேலும் வயதானவர்கள் பல பேர் வெற்றிலையை உண்பதையே வேலையாக வைத்துக் கொண்டு தினமும் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் வேற வேலை இல்லை என்று நாம் நினைத்திருப்போம் ,ஆனால் அது உண்மை இல்லை நம் முன்னோர்கள் எதை செய்தாலும் அதில் ஒரு அறிவியல் ரீதியிலும் ஆன்மிக ரீதிகளும் பார்த்து தான் ஒரு செயலை செய்து இருக்கிறார்கள். சரி அப்படி என்ன வெற்றிலையில் நன்மைகள் உள்ளன மேலும் வெற்றிலையை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதைப் பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.
ஆன்மீகத்தில் வெற்றிலையின் பயன்கள்
ஆன்மீகத்தில் வெற்றிலையின் பயன்கள் ஏராளம் உள்ளது அவை ஒவ்வொன்றாக பின்வருமாறு காணலாம்.
- நம் பாட்டிகள் அனைவரும் வெற்றிலை போடும்போது ஒரு விஷயத்தை நாம் கவனித்து இருப்போம். அவர்கள் வெற்றிலையை எடுத்து அதில் உள்ள காம்பை நீக்கிவிட்டு பின்பு வெற்றிலை போடுவர் .ஆனால் நம்மில் பல பேர் அதை எதற்கு என்று தெரியாமல் காம்பை விரும்பி சாப்பிடுவதும் உண்டு. ஆனால் அப்படி உண்பதால் நமக்கு எந்த நன்மைகளும் வராது ஏனென்றால் வெற்றிலையின் காம்பு என்பது மூதேவிக்கு உரிய பகுதியாகும் மூதேவியை நாம் உண்பதால் நமக்கு என்ன பயன் இருக்கும் என்று நீங்களே சிந்தித்துப் பாருங்கள். அதையும் மீறி நீங்கள் வெற்றிலை காம்போடு சேர்த்து சாப்பிட்டால் உங்களுக்கு வறுமை ஏற்படும்.செல்வ செழிப்பு குறைந்து மூதேவி குடி கொள்வாள் எனவே எப்பொழுதும் காம்பை அடியோடு நீக்கிவிட்டு பின்பு வெற்றிலை போடுங்கள்.
- வெற்றிலையில் ஸ்ரீதேவி குடி கொண்டிருக்கும் பகுதியாக உள்ளது வெற்றிலையின் முனை. எனவே எப்பொழுதும் கவனமாக முனை ஒடிந்து இருக்கும் வெற்றிலையை உண்ணாதீர்கள். ஸ்ரீதேவியை நீக்கிவிட்டு நாம் செய்யும் செயல் அனைத்துமே நமக்கு எதிர்வினையை கொடுக்கும் ஸ்ரீதேவியால் ஏற்படும் செல்வ செழிப்பு நீங்கிவிடும் எனவே முனையுள்ள வெற்றிலையை கொண்டு வர ஸ்ரீதேவி தயாரின் அனுகிரகம் கிடைத்து வீட்டில் செல்வ செழிப்புடன் இருப்பீர்கள் வறுமை குறைந்து தன லாபம் கிடைக்கும்.
- வெற்றிலையின் ஒவ்வொரு பகுதிகளும் ஒரு தேவதை குடிகொண்டு இருக்கிறாள் என்பது ஆன்மீக ஐதீகம். எனவே வெற்றிலையின் எந்த பாகம் சேதம் அடைந்திருந்தாலும் அது அந்தப் பகுதியில் குடிகொண்டு இருக்கும் தேவதையை பாதிக்கும் . அப்படி பாதித்த ஒரு வெற்றிலையை நாம் உண்பதால் நமக்கு சாபம் கிட்டுமே தவிர நன்மை கிடைக்காது.
எனவே நாம் சாப்பிடுவதற்கு எடுக்கும் வெற்றிலையோ அல்லது பூஜைக்கு எடுக்கும் வெற்றிலையோ எதுவாக இருந்தாலும் இது அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை கவனித்து எடுங்கள். வெற்றிலையின் காம்பு முனை ஆகியவை கிழிந்து இருக்கக் கூடாது மேலும் வெற்றிலையின் எந்த பகுதியும் கிழிந்து இல்லாமல் நன்றாக உள்ளதா என்பதை பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்படி அனைத்தும் சரியாக உள்ள வெற்றிலையை நாம் வைத்து பூஜை செய்யும் பொழுது கோடான கோடி நன்மைகளும் உங்களை வந்து சேரும் வெற்றிலையின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள தேவதைகளின் அருளாகி பரிபூரணமாக உங்களுக்கு கிடைத்து வாழ்வில் உள்ள துன்பங்கள் நீங்கி இன்பம் மலரும்.
வெற்றிலையின் ரகசியத்தையும் ஆன்மீக குணத்தையும் இப்பொழுது அறிந்திருப்பீர்கள் எனவே தெய்வீக தன்மை வாய்ந்த வெற்றிலையை உதாசீனப்படுத்தாமல் அதனை தெய்வமாக நினைத்து பூஜை அறையில் வைத்து வணங்கி வர உங்களுக்கு இறைவனின் முழு அருளாசியும் கிடைக்கும்.
மேலும் படிக்க : திருந்தாத சீனா விரட்டி அடிக்கப் போகும் இந்தியா!