ஆன்மிகம்ஆலோசனை

அரசமரத்தை வணங்குவது மூடத்தனமா!!!

நம் பாரத கலாச்சாரத்தில் மரத்தை வழிபடுவது ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர். இதை பலர் நம்புகின்றனர் சிலர் மூடநம்பிக்கையாக கொண்டு நம்பத்தகாதது என விவாதிக்கின்றனர். அப்படி ஒரு மூடநம்பிக்கையின் ஆன்மீகம் அறிவியல் பாரத அரசின் அங்கீகாரத்தை காண்போம். ஆம் இன்று நாம் அரசனுக்கு இணையான காக்கும் பண்பு கொண்ட அரச மரம் பற்றி அறிவோம் வாங்க.

அரசமரம்:

இந்த மரத்தினை பலர் கடவுளாக பாவிக்கின்றனர். அரசமரத்தினல் பழம் காய்க்காது, அதன் மரத்தண்டு எந்தவித பமற்றும் லமுமின்றி எக் காரியத்திற்கும் பயன்படாது. இவ்வாறு இருக்கையில் அதை ஏன் பூஜிக்கின்றனர்!!!

பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியை கிராமத்திலேயே பார்க்கலாம். படிப்பு தன்மையை அற்றதனாலோ!!!

அவ்வாறு நாம் கருதினால் நம்மை விட முட்டாள்கள் வேறு எவரும் இல்லை. ஏனென்றால் அனைத்து மரங்களும் இரவு நேரத்தில் மனிதர்களைப் போன்று ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளிவிடும் ஆனால் இந்த கருத்திற்கு விதிவிலக்காக இருப்பது மூன்று; அவை அரசம், வேம்பு, துளசி ஆகும்.

ஆன்மீக விளக்கம்:

புராணங்களில் குறிப்பாக ஸ்கந்த புராணத்தில், ஆண்மகன் இல்லாமல் ஒரு குடும்பம் வாரிசு அற்று இருக்கும் நிலையில் அரசமரம் அக்குடும்பத்தின் வாரிசாக கருதப்படுகிறது‌. அப்படி கருதப்பட்ட அந்த அரச மரம் உயிர் வாழும் வரை அக்குடும்பத்தின் பெயரும் நிலைத்து நிற்கும்.

அரச மரத்தை வெட்டுவதை வேதத்தில் கூறப்படும் பஞ்ச பாதக என்னும் ஐந்து கடும் பாவங்களில் ஒன்றான  பார்ப்பனனை கொள்வதற்கு சமமாக கருதப்படும் பாவம். அப் பாவத்தை செய்பவன் நரகத்தை அடைகிறான் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது.

பெண்கள் சிவப்பு வஸ்திரம் அல்லது சிவப்பு நூலைக் அரச மரத்தில் கட்டி தனக்கு புத்திர பாக்கியம் தருமாறு வேண்டுகின்றனர்.

இந்து மதத்தில் வழிபடும் அரச மரம் பல திருத்தலங்களில் ஸ்தல விருட்சமாக வணங்கப்படுகிறது. திருவாவடுதுறை, திருநல்லம், திருப்பரிதிநியமம் முதலிய சிவத்தலங்கள் அவற்றில் சில.

புத்த மதத்திலும் அரசமரத்தை வழிபடுகின்றனர். புத்தருக்கு ஞானம் பெற்றது அரச மரத்தின் அடியிலேயே. ஸம்ஸ்கிருதத்தில் அரச மரத்தை போதி என்ற பெயருடன் குறிப்பிடுகின்றனர்.

அறிவியல் விளக்கம்:

இரவு நேரத்தில் முன்னோர்கள் நம்மை மரத்தின் அடியில் உறங்கக் கூடாது எனக் கூறுவர் அதற்கான விளக்கம் என்னவென்றால் மரங்கள் இரவு நேரத்தில் கார்பன் டை ஆக்சைடை வெளிவிடும் ஆகையால் நமக்கு உடல் உபாதைகள் வர தொடங்கும். ஆனால் அரச மரமும் இரவு நேரத்தில் நமக்குத் தேவையான ஆக்சிஜனை வழிப்படுத்தி நம்மை வாழ வைக்கிறது.

திக்கு வாய் நாக்கு உளறல் போன்ற பேச்சு திறமையில் பாதிப்பு உள்ளவர்களுக்கு அரச இலையில் தேனை விட்டு நக்கினால் குணமடையும் என்று சொல்லப்படுகிறது.

அரச மரத்தின் இலையை வாட்டி புண்கள் மற்றும் காயங்கள் மீது இட்டால் அது குணமடையும்.

பாரத அரசின் அங்கீகாரம்:

நம் இந்திய அரசு ஆண்டுதோறும் பல விருதுகளை வழங்கி வருகிறது. அந்த விருதுகளில் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது அரச இலையின் சின்னத்தையே கொண்டது. அரசு மரம் அரசனைப் போன்ற மதிப்பை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *