இந்த சிறப்புகளைப் பெற 16 நாட்கள் வழிபடுங்கள்
மஹாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு பிறகு 15 நாட்கள் தொடர்ந்து வழிபட்டு மஹாளய பட்சத்தின் இறுதி நாளாக மிக முக்கிய நாளாக பார்க்கப்படும். மஹாளய அமாவாசை பட்சம் காலத்தில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் புத்திர பாக்கியம், ஞானம், கல்வி, சத்ரு ஜெயம் ஆகியவை கிடைக்கும்.
எந்த நாட்களில் தர்ப்பணம் கொடுப்பதால் என்ன பலன்கள் மகாளயபட்சம் 15 நாட்களும் தர்ப்பணம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பிரதமை அன்று தர்ப்பணம் செய்ய பணம் சேரும். துவிதியை திதி இரண்டாம் நாள் தர்ப்பணம் செய்ய ஒழுக்கமான குழந்தைகள் பிறக்கும். திருதியை மூன்றாம் நாள் நினைத்தது நிறைவேறும். சதுர்த்தி நான்காம் நாள் பகைவர்கள் தொந்தரவு குறையும். பஞ்சமி ஐந்தாம் நாள் சொத்து சேரும்.
சஷ்டி ஆறாம் நாள் புகழ் வந்து சேரும். சப்தமி ஏழாம் நாள் பதவி பெறும். அஷ்டமி எட்டாம் நாள் சமயோசித புத்தி கிட்டும். நவமி ஒன்பதாம் நாள் திருமண தடை நீங்கும், பெண்குழந்தை பிறப்பார்கள். தசமி பத்தாம் நாள் நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
ஏகாதசி பதினோராம் நாள் கல்வி கலை வளர்ச்சி, விளையாட்டுத் திறன் மேம்படும். துவாதசி 12 நாள் ஆடைகள், நகைகள் சேரும். திரயோதசி பதின்மூன்றாம் நாள் ஆயுள், ஆரோக்கியம், விவசாயம் செழிக்கும். சதுர்த்தசி பதினான்காம் நாள் தலைமுறைகளுக்கு நன்மை சேரும், பாவம் நீங்கும்.
மஹாலய அமாவாசை பதினைந்தாம் நாள் முன் சொன்ன அத்தனை பலன்களும் கிடைக்கும். முன்னோர்களை தர்ப்பணம் செய்து இத்தனை நாட்களும் வழிபடுவதால் நம் வாழ்க்கை ஒளிமயமாக அமைவதுடன் நம் தலைமுறையினருக்கும் நன்மையைச் சேர்க்கும்.