ஆடி 18 இல் இதை செய்தால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்…
ஆடி பதினெட்டு நமது இந்திய கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம் என்பர். விவசாயத்தின் இன்றியமையாமையை உணர்த்தும் ஒரு பசுமையான பண்டிகையாக இருப்பது ஆடி 18. காவிரி அன்னையை போற்றி வணங்கும் திருநாள். காவிரி கரையோரம் உள்ள கிராமங்களில் ஆடிப்பெருக்கு மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும்.காவிரி கரையோரம் இருப்பவர்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்பது இல்லை. நீரால் பயன்பெறும் அனைத்து உயிர்களும் நீருக்கு செய்யும் ஒரு ஆத்மார்த்தமான மரியாதை கலந்த பண்டிகை தான் ஆடி பண்டிகை. நீரின்றி அமையாது உலகு என்பர் நீரில்லை என்றால் இவ்வுலகில் எந்த உயிரும் இருக்க முடியாது ஆகவே நீருக்கு நாம் அனைவரும் கடமைப்பட்ட உயிர்களாக உள்ளோம்..
இத்தனை சிறப்புகள் வாய்ந்த உன்னதமான இந்த ஆடி பண்டிகையில் முளைப்பாரி எடுத்து நீரில் கரைப்பது நமது வழக்கம். இதனால் விவசாயம் செழிக்கும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது மேலும் இந்நாளில் அம்மனுக்கு நெய்வேத்தியம் வைத்து பூஜை செய்து மனமுருகி வேண்டிக் கொள்வதால் நாம் நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேறும்.
காவிரியை வணங்கும் இத்திருநாளில் நாம் நகைகள் வாங்குவது மிகவும் சிறப்பு தரும் இந்நாளில் நாம் நகைகளை வாங்கும் பொழுது மேலும் செல்வ செழிப்பு உண்டாகும் வீட்டில் உள்ள கடன் பிரச்சனைகள் தீரும் குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் செல்வ செழிப்புடன் செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும்.
மேலும் படிக்க : ஆடி பிரதோஷத்தில் அம்மனை வழிபடலாமா???
எனவே இறைவனுக்கே உரிய ஆடி மாதத்தில் நீங்கள் முளைப்பாரி வைத்து இறைவனை மனதார வழிபட்டு முடிந்தால் தங்க நகைகள் வாங்கி வீட்டில் வைத்து அம்மன் வைத்து பிரார்த்தனை செய்து பின்பு அதனை அணிந்து கொள்வதால் செல்வ செழிப்பு உண்டாகும் . கோடிஸ்வர யோகம் உண்டாகும்.