செய்திகள்ராணுவம்

இந்திய இராணுவத்தை அங்கீகரிக்கும் செயலி எஃப்ஏயு-ஜி

மக்களுக்கான நற்செய்தி பப்ஜியின் வெற்றிடத்தை நிரப்ப இந்திய செயலி வந்துவிட்டது. ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார் இந்த சந்தோஷமான செய்தியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்பதற்கிணங்க இந்தியர்கள் எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்று புகட்டும் வகையில் இந்தியர்கள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இன்று எஃப்ஏயு-ஜி என்னும் மல்டிபிளேயர் அதிரடி விளையாட்டை பற்றிய தகவலை சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டார்.

எஃப்ஏயு-ஜி

எஃப்ஏயு-ஜி என்பதின் விரிவாக்கம் அச்சமற்ற மற்றும் ஒற்றுமையான காவலர்கள். இது ஒரு பொழுதுப்போக்கு விளையாட்டாக மட்டுமல்லாமல் ராணுவ வீரர்களின் தியாகத்தை தெரிந்து கொள்ளும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இந்த விளையாட்டு நிஜமான எல்லைப் பகுதியில் இருக்கும் ராணுவ வீரரின் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கக்கூடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயங்கரவாதம் தீவிரவாதம் என பல அச்சுறுத்தலை சவாலாக கொண்டுள்ளது.

இந்த விளையாட்டு செயலி அக்டோபர் மாதக் கடைசியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விளையாட்டின் முதல் கட்டம் கல்வான் பள்ளத்தாக்கை மையமாகக் கொண்டு சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் என இரண்டிற்கும் வெளியாகிறது.

பெங்களூரில் இருக்கும் ஒரு விளையாட்டு நிறுவனம் இந்த விளையாட்டை வெளியிடுகிறது. இந்த விளையாட்டு மூலம் கிடைக்கும் பணவரவில் 20% நிஜ வாழ்க்கை கதாநாயகர்களான எல்லை வீரர்களுக்கு நன்கொடையாக வழங்கப்பட உள்ளது.

எல்லையில் கடுமையான சூழல் நிலவி வர வீரர்களுக்கு அங்கீகாரம் கொடுத்து சிறப்பிக்கும் வகையில் இந்த செயலி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியர்களால் உருவாக்கப்பட்ட செயலி என்ற பெருமையும் சேர்ந்தே அளிக்கிறது.

‘பிரதமர் மோடியின் அழைப்பிற்கு பதில் அளித்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டை உலகிற்கு தருவதில் பெருமை கொள்கிறேன். இந்த விளையாட்டில் கெட்ட சக்தியை அழிப்பது மட்டுமே விளையாடுபவர்களின் எண்ணமாக இல்லாமல் எல்லை தியாகிகளை ஆதரித்து தேசத்தைக் கட்டியெழுப்ப சமுதாய பங்களிப்பாக இருக்கும்.’ என இந்த விளையாட்டு நிறுவனத்தின் நிருபர் விஷால் கொண்டல் தெரிவித்தார்.

பல எதிர்பார்ப்புகளை தூண்டிய இந்த விளையாட்டிற்காக மக்கள் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *