அன்பும் உறவும்வாழ்க்கை முறை

தந்தையர் தினம் கொண்டாட்டம்..!!

ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்னையர்களை கௌரவிப்பதற்காக கொண்டாடப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடைய செய்கிறது. இருபதாம் நூற்றாண்டில் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையை கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவு விழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கௌரவிக்கப்பட்ட வருகின்றது. உலக அளவில் தந்தையர் தினம் பல்வேறு தேதிகளில் கொண்டாடுகின்றன. தந்தையர் தினத்தன்று தந்தையருக்கு பரிசு கொடுப்பது. அன்றைய தினம் சிறப்பு விருந்து அளிப்பது. குடும்ப உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சர்வதேச தந்தையர் தினம்

உயிர் கொடுத்தவர் அன்னை என்றால் உலகை அறிமுகப் படுத்தியவர் தந்தை என்று சொல்ல வேண்டும். தன்னையே உருக்கி கொடுத்த நம் தந்தையர்களை சர்வதேச தந்தையர் தினம் அன்று நினைவுகூர்வோம். பத்து மாதம் சுமந்து உலகுக்குக் காட்டியவர் அன்னை என்றால், தோளில் சுமந்து உலகை காட்டுபவர் நம் தந்தையாவார்.

பொதுவாக ஆண்களின் உலகம் தியாகங்களாலும், வியர்வையாலும் சூழப்பட்டுள்ளது. அடுத்தவர்களின் அதற்காக தங்கள் ஆயுள் முழுவதும் அர்ப்பணித்தவர்கள். தந்தைகளுக்கு முக்கிய இடம் உண்டு. அப்படிப்பட்ட தந்தையர்களை பெருமைப்படுத்தும் ஒரு நாளில் சர்வதேச தந்தையர் தினம் இன்று ஜூன் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

தந்தையின் தியாகத்திற்கு

அமெரிக்க ராணுவ வீரரான வில்லியம் ஜாக்சன் உடைய மகளாக பிறந்த சொனாரா தன் 16 வயதில் தன் தாய் மரணம் அடைந்த காரணத்தால் தன் வீட்டின் பொறுப்பு  முழுமையையும் தந்தை சுமக்கிறார். அவரை கௌரவிக்கும் விதமாகவே தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். தன் தந்தையின் தியாகத்திற்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை என வாதிட்ட சொனாரா.

தன்னுடைய தந்தை பிறந்தநாளை தந்தையர் தினமாக கொண்டாட வேண்டும் என தேவாலயத்தில் ஆவண செய்தார். இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த தினத்தை நாம் தந்தையர் தினமாக கொண்டாடி வருகிறோம். 1972 அமெரிக்க அதிபர் நிக்சன் தந்தையர் தினத்தை அங்கீகரித்தார். 1909 சொனாரா எடுத்த முயற்சியால் இன்று நம் கனவுகளுக்கு உருவம் கொடுத்த தந்தையை நினைவு கூற ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இன்றைய தினத்தில் பெரிய அளவில் கொண்டாட முடியவில்லை என்றாலும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். தந்தையுடன் சிறிது நேரம் செலவழிக்கலாம். அவரின் மனதிற்கு பிடித்த இடத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்யலாம். எனக்கு பிடித்த விஷயங்களையும், எத்தனையோ ஆசைகளையும், குடும்பத் தேவைகளை காரணம் காட்டி ஒதுக்கி வைத்தவர்.

மரியாதை செலுத்தும் விதமாக

உங்கள் தந்தை எனவே அவரை நீண்டநாள் ஆசையை நிறைவேற்றி வைப்பதற்கு உங்கள் அருகில் இல்லையென்றாலும், அந்த தினத்தை நினைவு கூறுவதே தந்தைக்கு நீங்கள் அளித்த மிகப்பெரிய பரிசாக இருக்கும். நம்மைப் பெற்றெடுத்து பெற்ற அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கொண்டாடப்படும் இந்த நாள் அன்னையர் தினத்திற்கு இணையான சிறப்புகளை பெற்றது.

தந்தையின் வழிநின்று

நமக்கு முதல் ஹீரோ நம் தந்தை. பல சூழ்நிலைகளில் அவரை பின்பற்றி நமது ஒவ்வொரு செயலும் அமைந்திருக்கும். குழந்தைகள் சிறுவயதில் இருந்தே மரியாதை செலுத்த வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த தந்தையர் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டுக்கான கடமையை கற்றுக் கொடுப்பது போல, வீட்டுக்கும், நாட்டுக்கும், சமூகத்திற்கும் கடமையை தந்தையின் வழிநின்று பல குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர் என்று நீங்கள் கேட்பீர்கள்.

ஆனால் தந்தையர் தினம் ஆண்டுதோறும் கொண்டாட வேண்டுமா என்றால் வேண்டும் என்பதே பதிலாக இருக்கும். பிள்ளைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை கைவிடும் சம்பவங்கள் அதிகரித்து விட்டன இந்திய சமூகத்தில் பெருகி விட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது. இதுபோன்ற ஒரு கட்டமைப்பில் நம்முடைய தமிழ் சமூகம் தனது எவ்வாறு அணுகுகிறது என்பது மிக முக்கியமாகும்.

கொண்டாடுங்கள்

தந்தையை கொண்டாடுங்கள். கேக் வெட்டி உங்கள் அப்பாவை புத்துணர்ச்சி செய்யுங்கள். உடைகள் எடுத்துக் கொடுங்கள். உங்கள் சக்திக்கு ஏற்ற பொருட்களை வாங்கி பரிசளியுங்கள். அவருக்கு பிடித்த உணவை செய்து கொடுங்கள். தந்தை மகனுக்கு விரோதம் இருந்தால் அதை மறக்க முயற்சி செய்யுங்கள். தந்தையே நீங்கள் இழந்து இருந்தால் அவருடைய நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி பாருங்கள்.

இதுவே தமிழ் சமூகத்தில் தந்தையர் தினம் கொண்டாடப் படுவதற்கான சான்று. ஃபேஸ்புக்கில் தந்தையர் தினத்திற்கான அன்பை பகிர்வது சுற்றத்திற்கு தெரிந்தாலும், அது உங்கள் அப்பா உணர்ந்து கொள்வாரா என்பது சந்தேகமே. அதனால் முடிந்த வரையில் வரும் தந்தையர் தினத்தன்று உங்கள் தந்தையுடன் மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *