தந்தை என்பவர் வாழ்வின் ஒளி ஆவர்!
இன்று தந்தையர் தினம் உலகமக்கள் அனைவருக்கும் தந்தையர் தின நல்வாழ்த்துக்கள். உலகத்தின் ஒளி என்பது என்ன என்றால் சூரிய கதிர் ஒளி என்போம். அதுபோல் ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வின் ஒளி கொடுப்பவர்கள் என்பவர்கள் தாய் தந்தையர்களாக இருப்பார்கள். வாழ்வின் நாம் கடின சூழலை காணும் போது தான் தெரியும். அதனை நம் வாழ்வில் உணரும்போது தான் புரியும் தாய் தந்தையர் நம்மீது கொண்டுள்ள அன்பு அவர்கள் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் விதம் ஆகியவை அனைத்தும் தெரியவரும். நம் வாழ்வின் ஒளியானது நாம் வாழ்வில் பெறுகிறோம்.
தாய் எப்படி பத்து மாதம் சுமந்த பெற்றெடுக்கிறாள். தாயைப் போல்தான் தந்தை என்பவர் நம்மை தோளில் சுமந்து, வாழ்வில் கரையேற்ற நெஞ்சில் சுமந்து காக்கும் மாபெரும் சக்தி தந்தை ஆவார். தந்தை வாழ்வில் எப்போதும் நமக்கு ஒரு விந்தைதான் என தாயுக்கு இவ்வளவு விளக்கவுரைகள் கொடுக்கின்றோம். தந்தைக்கு நாம் எளிதாக விளக்கவுரைகள் கொடுக்க முடிவதில்லை. அதற்காக தந்தை குறைந்தும் அழகு மதிக்கப்படுகிறார்கள் இல்லை.
வாழ்வில் சூரிய அஸ்தமனம் ஆவதும் உதிப்பதும் எப்படியோ அதுபோல்தான் தந்தை அவர் என்றே நமக்கு ஞானம் கிடைக்கப் பெறாது. தந்தையர் தினம் என்பது இந்தியாவிற்கு புதிதல்ல குடும்பத்தின் தலைவர் என்றால் தந்தையர் என்றுதான் சொல்வோம். நாம் அனுதினம் அவரோடுதான் பயணிக்கின்றோம்.
நமது குடும்ப வாழ்வில் தாயும் தந்தையும் தன்னலமற்ற ஜீவன்கள் காலங்கள் கோலங்கள் மாறினாலும் அவர்கள் நம் மேல் கொண்ட அன்பு மாறாது. அவர்களைக் காக்கும் நமது பண்பு மாறாதது. தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் உடன் பெற்றோரை மதிப்போம். வாழ்வின் இறுதிவரை அவர்களை வழி நடத்தி வாழ்ந்தோம். இறுதியில் அவர்கள் நிம்மதி பெருமூச்சுடன் இருக்க நிச்சயம் அவர்களுக்கு கடமை செய்வோம்.
இதனைத்தான் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் தாயிற் சிறந்த கோவில் இல்லை என்கின்றனர். இதனை நாம் பின்பற்றி செயல்படுவோம்.