வற்றாத செல்வ வளம் தரும் வழிபாடுகள்..!!
வற்றாத செல்வவளம் தரும் கிருத்திகை இணைந்து வரும் பிரதோச வழிபாடுகள். ஜூன் 18-ஆம் தேதி கிருத்திகையும், பிரதோஷமும் ஒரு சேர அமையும் நாள். நாளை மழை வருமா? விரதமிருந்து காலையில் எழுந்து குளித்து பின் பூஜை செய்து விரதத்தை தொடங்கலாம். மாலை 4.30 முதல் ஆறு முப்பது வரை இந்த பூஜையை செய்து வரலாம். நாள் முழுவதும் விரதமிருந்து இந்த பூஜை செய்வதன் மூலம் செல்வ வளம் அதிகம் பொறிக்கப் பெற்ற வீட்டில் நிம்மதி பெருகி சந்தோசம் கிடைக்கச் செய்யும்.
அருளினை சிவபெருமான் மற்றும் முருகனை வேண்டி பெறலாம். கிருத்திகையும், பிரதோஷமும் ஒன்று கலந்து வரும் இந்நன்னாளில் விரதமிருந்து மௌன விரதம் அனுஷ்டித்து நாள் முழுவதும் சிவ பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வாழ்வுக்கு தேவையான அமைதி குடும்ப நலம், செல்வ வளம் ஆகியவை அனைத்தும் ஒருங்கே பெறலாம்.
வீட்டிலுள்ள ஒருவர் காலையிலிருந்து மாலை வரை விரதமிருந்து தண்ணீர் மட்டும் குடித்து வரலாம். மாலை நான்கு முப்பதுக்கு வீட்டிற்கு அருகில் இருக்கும் சிவன் ஆலயம் சென்று பால், இளநீர், சந்தனம் ஆகியவை அபிஷேகம் ஆக கொடுத்து வரலாம். இதன் மூலம் வாழ்வில் வற்றாத செல்வம் கிடைக்கப் பெற்று வீட்டில் என்றும் நிம்மதி பொங்கி குடும்ப ஒற்றுமை பலமாகி அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறலாம்.
கிருத்திகையும் பிரதோஷமும் ஒன்று கூடி வரும் இந்த நாளில் கந்தசஷ்டி படித்து, காலை முருகனின் சரவணபவ சொல்லி சிவபெருமானின் பஞ்சாட்சர மந்திரத்தை நாள் முழுவதும் உச்சரித்து வரலாம். விரதமிருக்கும் இந்த நாளில் டிவி பார்ப்பது சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க வேண்டும்.
முழுவதுமான இறைவனோடு இறை பக்தியோடு தங்களது பணியில் கவனம் செலுத்தி நாலு முப்பது மணி அளவில் பூஜையில் கலந்து கொண்டு ஆறு மணி அளவில் பூஜை முடிந்த பின்பு மீண்டும் வழக்கம் போல உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இந்த நாளில் மௌன விரதம் இருப்பதும் சிறப்பாக கருதப்படுகின்றது.