ஆன்மிகம்

விநாயகருக்கு விரதம் இருப்பவரா நீங்கள்!

சதுர்த்தி,சங்கடகரா சதுர்த்தி மாதங்களில் முக்கியமான தினங்களாகும்.  இந்நாட்களில் மக்கள் விரதம் இருந்து கேவிலுக்குச் சென்று அபிசேக ஆராதனைகள் செய்து வழிபடுவார்கள். அவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்களுக்கு  விரதம் இருக்கும் முறைகளையும், பலன்களையும் இங்கு விளக்கி கூறியுள்ளோம்.

அபிசேக ஆராதனைகள்

விநாயகர் முதல் கடவுள்,  அனைத்து பூஜைகளுக்கும் முன்னின்று உதவும்  கடவுள் ஆவார்.  கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து அருள் புரிவார். அதனால்தான் அவர் எல்லோருக்கும் பொதுவானவராகவும், எளிதில் வழிபடும் வகையிலும் இருக்கிறார். நினைத்த காரியம் நிறைவேற விநாயகருக்கு விரதம் இருக்கும்போது நாம்  செய்ய வேண்டியவை,   விரத முறைகள்  பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

தொழிலில் லாபம் பெற விரதம் இருப்பவர்கள் குயவர் மண்ணால் செய்த மண் சிலையை பூஜை அறையில் வைத்து வணங்க வேண்டும்.

கடன் தீர விரதம் இருப்பவர்கள் சிறு தொகையை பூஜையில் வைத்த பிறகு உரிய நபருக்கு கொடுக்க முயற்சித்தால் அந்த ஆண்டிற்குள் படிப்படியாக கடன் அடைந்துவிடும்.

ஒரு வருட காலத்திற்கு விரதம் இருக்கும்போது இடையில் இறப்பு, தீட்டுக்காலம் வந்தால் 16 நாட்கள் நிறுத்திவிட்டு அடுத்து வருகிற வெள்ளிக்கிழமை அன்று காக்கைக்கு காலையில் நெய் விட்டு, வெறும் சாதத்தை போட்டு காக்கை எடுத்த பின் விரத பூஜையை தொடங்கலாம்.

கல்வியில் முன்னேற்றம், வேலை கிடைக்க வழிபாடு செய்பவர்கள் வலம்புரி கணபதியை பூஜையில் வைத்து வழிபட்டு மறுநாள் காலையில் அரச மரத்து விநாயகரை சுற்றி வந்து வணங்குவதான் வேண்டிய பலன் கிடைக்கும்.

காலையில் எழுந்து குளித்து விட்டு விநாயகரை நினைத்து தீபம் ஏற்றி ஒரு பொழுது விரதம், ஒரு வேளை உணவு உண்டு இருக்க வேண்டும்.

விநாயகர் விரதம்

விநாயகர் விரதம் தொடங்குபவர்கள் பாதியில் விரதத்தை நிறுத்தாமல் இருப்பது சிறப்பாகும்.

மஞ்சளில் பிள்ளையார் பிடித்து 48 நாட்கள் விரதமிருந்து பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜிக்க திருமணம் விரைவில் நடக்கும்.

நவகிரக தோஷம் உள்ளவர்கள் விநாயகருக்குப் பின்புறம் நெய்தீபம் ஏற்றிவர பீடைகள் விலகும். வெள்ளெருக்குத் திரி போட்டு நெய் தீபம் ஏற்றிவர குடும்பத்தில் வறுமை விலகும்.

சதுர்த்தி நாளில்  அரிசியை சாதமாக்கி எறும்புப் புற்றில் உள்ள எறும்புகளை பிள்ளைகளாய் பாவித்து தூவ விநாயகர் மகிழ்ந்து குழந்தை வரம் தருவார்.

நாக்குப் பிறழாத குழந்தைகளுக்கு தமிழ் மாதத்தில் 3-ம் செவ்வாயன்று விநாயகரை வழிபட்டு இனிப்பு பழங்கள் படைத்து தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

பிள்ளையாரின் அருள் கிடைக்க அனுதினமும் பிள்ளையாரை நினைத்து பாட வேண்டும். உலகத்தை தன்னுள் கொண்ட விநாயகரை விரதமிருந்து வழிபட்டு சகல நன்மைகளையும்  கிடைக்கப் பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *